chennireporters.com

நீட் தேர்வு பா.ஜ க தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று நந்தினி என்ற மாணவி வழக்கு

நீதிபதி A.k.ராஜன்.

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு எதிராக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றமத்தில் முறையீடு செய்யப்பட்டது.

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணையில் உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, மாநில அரசு கமிட்டி அமைத்து விசாரிக்க முடியாது என்றும், உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு அனுமதி பெற்றதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், முதல் அமர்வில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, மாணவி நந்தினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

கரு.நாகராஜன். பா.ஜ.க

அந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக மாணவி நந்தினியை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் இதை ஏற்றுக்கொண்ட முதல் அமர்வானது, மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், வரும் திங்கட்கிழமை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தனர்.

மாணவி நந்தினி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ நீட் தேர்வு விவகாரம் மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று. அதில், அரசியல்வாதிகளுக்கு இடமில்லை.

நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டி அமைக்கப்பட்டதை எதிர்த்து அரசியல் கட்சியை சார்ந்த ஒருவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.அரசியல்உள்நோக்கத்தோடுதொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு ஆய்வு செய்து முடிவுகளை அரசிடம்தான் அளிக்க உள்ளது.யாருடைய உரிமைகளும் இதில் பாதிக்கப்படப் போவதில்லை.

ஆகவே,இந்த வழக்கில் மாணவி என்ற முறையில் தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும்.

நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க.!