chennireporters.com

திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தா ஆகிய இருவரின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து நடிகை சமந்தா தங்களது மன வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரை உலகில் நீண்ட நாட்களாக இவர்களது விவாகரத்து குறித்த செய்தி கசிந்து வந்த நிலையில் தற்போது அதை சமந்தா உறுதி செய்துள்ளார்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு நானும் நாக சைதன்யாவும் கலந்துபேசி திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து அவரவர் வழியில் செல்ல முடிவு செய்துள்ளோம்.

எங்களை உறவு முறையில் நெருங்கச் செய்ததுஎங்களது 10 ஆண்டுகால நட்பு தான் .எங்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்தியது.ரசிகர்கள் நலன் விரும்பிகள் மற்றும் மீடியா நண்பர்கள் இந்த இக்கட்டான நிலையில் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் எங்களுக்கு கொடுக்கப்படும் பிரைவேசி மூலமாக வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறோம்.உங்களது ஆதரவுக்கு நன்றி என சமந்தா தெரிவித்துள்ளார்.2010ஆம் ஆண்டில் வெளியான ‌. “மாய சேசவே” என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சமந்தா.

தமிழில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு டப்பிங் இது.இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா சமந்தா இருவரும் நடித்திருந்தனர்.

தொடர்ந்து தெலுங்கில் மனம், ஆட்டோ நகர் சூரியா, மஜிலி போன்ற தெலுங்கு படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.கடந்த 2017ல் சமந்தாவும், நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.அந்த ஐந்தாண்டு கால வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க.!