chennireporters.com

திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.இந்த சோதனை யில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவாளர் மற்றும் துறை பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர்சோதனை நடத்தினர்.

இந்த சோதனை யின் போது சார்பதிவாளர் மற்றும் துனை பதிவாளர் இருவரிடமும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் கணக்கில் வராத ரூபாய் 53 ஆயிரத்து 130 மற்றும் பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் இந்த ஆய்வின் போது பத்திர பதிவுக்கு வந்த நபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.அதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான திருவள்ளூர், மணவாளநகர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி , பூந்தமல்லி, அம்பத்தூர் போன்ற பத்திரப்பதிவு அலுவலகங்களில் அரசு தடை செய்யப்பட்ட இடங்களை இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு நிலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பத்திரப்பதிவு துறை ஐ.ஜி. மற்றும் தமிழக முதல்வர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது.

திருவள்ளூரை தொடர்ந்து மாவட்டத்தின் முக்கிய அதிக வருவாய் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில்லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க.!