chennireporters.com

#Avadi Assembly constituency; அடித்து தூள் கிளப்பிய ஆவடி தொகுதி உடன் பிறப்புக்கள். கொண்டாட்டத்தில் திமுகவினர்.

#Election special story 2026

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்து விட்டு அனல் பறக்கும் பிரச்சாரமும் ஓய்ந்து விட்ட நிலையில் ஆவடி தொகுதி திமுகவினர் தனது கட்சி தொண்டர்களையும், கூட்டணி கட்சியினரையும் ஒன்று சேர்த்து வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து நாம் சில முக்கிய திமுக பிரமுகர்களை சந்தித்து தொகுதி நிலவரம் பற்றி கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  நாங்கள் வாக்கு சேகரிக்க வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டோம் என்றார்.  அப்படி என்ன செய்து இருக்கிறார்கள் என்று களத்தில் இறங்கி விசாரித்தோம்.

கடந்த 2021 ஆம் தேர்தல் வெற்றியை காட்டிலும் இந்த முறை கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்கின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஒரு மூத்த நிர்வாகி ஆவடியை பொறுத்தவரை அமைச்சர் நாசரை எதிர்க்கிற தரமான வேட்பாளர்கள் யாரும் களத்தில் நிறுத்தப்படவில்லை என்பது எதார்த்தமான உண்மை அதுவே எங்களுக்கு பெரும் வெற்றி.மேலும் பாஜக சார்பில் போட்டியிடுகிற அஸ்வின் தரமான வேட்பாளரும் அல்ல நல்ல வேட்பாளரும்  அல்ல அது மட்டுமல்லாமல் தொகுதிக்கு அவர் தெரிந்த முகமும் அல்ல அது மட்டும் இல்லாமல் அவர் மீது ஏற்கனவே இளம்பெண் ஒருவரை ஏமாற்றிய வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆவடி தொகுதியில் மக்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்து விட்டு சாலை, மின்விளக்கு என மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து இருக்கிற அமைச்சர் தொகுதியில் நல்ல பெயர் பெற்றிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பாஜக அதிமுக கூட்டணியை ஒரு நல்ல இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு வாக்களிக்கும் மாட்டார்கள் என்பது எதார்த்தமான உண்மை என்றார்.இரண்டாவது தமிழக வெற்றி கழகம் சார்பில் நிற்கும் வேட்பாளர் பிஷப்பாக இருந்தவர். பிஷப்பாக இருந்தவருக்கு அரசியல் மீது என்ன ஆசை. ஆட்சி அதிகாரத்தின் மீது ஆசைப்படுகிற ஒருவர் எப்படி துறவியாக இருந்திருக்க முடியும் அவருக்கு ஏற்கனவே தினத்தூது ராஜா என்கிற பெயரில் கிருத்துவ மதத்தில் பணியாற்றி இருக்கிறார். அவர் தற்போது ஆவடி தவெக வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார் அதற்காக அவர் பெயரை ரமேஷ் குமார்என்று மாற்றிக் கொண்டதாக தெரிகிறது.

இவர் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் ஆவடி தொகுதியின் உடைய அடிப்படைத் தேவைகள் ஆவடி தொகுதியின் உடைய பரப்பளவு ஆவடி தொகுதியில் எவ்வளவு வாக்குகள் எத்தனை சமூக மக்கள் இருக்கிறார்கள் என்கிற எந்தவிதமான தகவலும் தெரியாமல் அதிகாரத்துக்கு வந்து விட வேண்டும் என்று அரசியல் அடிப்படை அறிவு தெரியாத விஜய் கட்சியில் இணைந்து வெற்றி பெற்று விடலாம் என்று நினைப்பது முட்டாள்தனத்தின் உச்சம் என்கின்றனர் திமுகவின் மூத்த நிர்வாகிகள்.எனவே எங்கள் தொகுதி வேட்பாளர் அமைச்சரவுமாக இருக்கிற நாசர் எளிதில் வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏன் வெற்றி பெற்றுவிட்டார் என்று நாங்கள் இப்போதே கொண்டாடத் தொடங்கி விட்டோம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிற திட்டங்கள் மாணவர்களுக்கு செய்து இருக்கிற திட்டங்கள் மகளிர் விடியல் பேருந்து, காலை உணவு திட்டம், மடிக்கணினி திட்டம் என இப்படி மக்கள் நலம் சார்ந்த பணிகளை செய்து இருக்கிறார்.

அதை நாங்கள் மக்களிடத்தில் கொண்டு சென்றிருக்கிறோம் மகளிர் உரிமைத்தொகை ஏழை குடும்பத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிற  பெற்றோரை தனியாக விட்டுச் சென்றிருக்கிற பெண்களுக்கு, மூதாட்டிகளுக்கு வயதானவர்களுக்கு இந்த உரிமைத் தொகை மிகவும் பாதுகாப்பானதாகவும் அவர்கள் பசியைப் போக்கும் அட்சய பாத்திரமாகவும் இருக்கிறது. இந்த ஒரே காரணத்தினாலேயே நாங்கள் தமிழகம் முழுவதும் தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்கின்றனர். எனவே ஆவடியை தொகுதிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, வசதிகள் மின்விளக்குகள் என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வந்து என்ன தேவை என்பதை கேட்டு அவரிடம் உதவி பெறலாம். எனவே கடந்த முறை நாங்கள் பெற்ற வாக்கை விட இந்த முறை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெயரை எடுப்போம் என்கின்றனர் ஆவடி மூத்த நிர்வாகிகள் சிலர்.

நாளை தேர்தல் நாள் அதுவரை நாங்கள் ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்போம் என்கிறார்கள். உற்சாகமாக விடியும் நல்ல காலை உதிக்கும் நல்ல சூரியன் தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்கின்றனர் ஆவடி தொகுதி உடன்பிறப்புக்கள்.

advt news

இதையும் படிங்க.!