தமிழகத்தில் டெபாசிட் இழந்த பாஜக வேட்பாளர்கள்.பாஜக தமிழகத்தில் கூட்டணி வைத்தும் கூட ஒரு ஒரு இடங்களை பெற முடியாமல் டெபாசிட் இழந்தது அந்த கட்சிக்கு வேண்டுமானால் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அது தமிழக மக்களுக்கே ஏற்கனவே தெரிந்த முடிவு தான். இந்த பரிதாப நிலையை சமூக வலைதளங்களில் வெறும் வாய்க்கு அவுல் கொடுத்த கதையாக மாறிப்போனது.
தேர்தலில் தோல்வியுற்றவர்களை கண்டு மக்கள் வறுத்தப்படாமல் தமிழ்நாடு முழுவதும் நெட்டிசன்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து நெட்டிசன்கள் வீடியோக்களையும் கமண்டுகளையும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதிமுகவுடன் கூட்டு வைத்திருந்தால் ஓரிரு இடங்களையாவது பிடித்திருக்கலாம் அல்லது டெபாசிட்டையாவது காப்பாற்றி இருக்கலாம். அரசியல் அனுபவம் இல்லாத ஆட்டுக்குட்டி அண்ணாமலை மூத்த அரசியல்வாதிகளுடன் இணக்கமாக போகாமல் முட்டாள்தனமாய் எடுத்த முடிவு தான் இந்த டெபாசிட் இழப்புக்கு காரணம் என்கின்றனர் பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள்.
கேசவ விநாயகம்.
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் கூட்டணி இல்லாமல் தாமரை ஒருபோதும் தமிழ்நாட்டில் மலர முடியாது. அரசியல் அனுபவம் இல்லாத, பக்குவம் இல்லாத அண்ணாமலையை பாஜக தலைமை தூக்கி எறிந்து விரட்டி அடிக்க வேண்டும் என்கின்றனர் பாஜக முக்கிய தலைவர்கள்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 19 பாஜக வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு சதவீதம் குறைந்த அளவே உள்ளது. பாஜக மக்கள் மத்தியில் டெபாசிட் இழந்து அவமானத்தால் வெட்கி தலை குனிந்து நிற்கின்றனர். குற்றப் பின்னணி உள்ளவர்களை பாஜகவில் இருந்து நீக்கினால் கட்சியின் மீது இருக்கும் அவப்பெயர் நீங்கும் என்கின்றனர் முக்கிய தலைவர்கள்.
கன்னியாகுமரி பொன் இராதாகிருஷ்ணன் வாங்கிய ஓட்டு 35.60% ,
கோயம்புத்தூர் அண்ணாமலை வாங்கி ஓட்டு 32.80%
திருநெல்வேலி நையினார் நாகேந்திரன் வாங்கிய ஓட்டு 31.54%,
தென் சென்னை தமிழிசை சௌந்தரராஜன் வாங்கி ஓட்டு 27%,
மத்திய சென்னை வினோஜ் செல்வம் வாங்கிய ஓட்டு 22.90%,
வடசென்னை பால் கனகராஜ் வாங்கி ஓட்டு 12.56%,
நீலகிரி முன்னாள் மத்திய அமைச்சர் முருகன் வாங்கி ஓட்டு 22.83%,
மதுரை பேராசிரியர் சீனிவாசன் வாங்கி ஓட்டு 22.38%,
பொள்ளாச்சி வசந்த ராஜன் வாங்கி ஓட்டு 19.84,
கிருஷ்ணகிரி நரசிம்மன் வாங்கி ஓட்டு 18. 36%,
தஞ்சாவூர் கருப்பு முருகானந்தம் வாங்கி ஓட்டு 16.59%,
திருப்பூர் ஏ.பி முருகானந்தம் வாங்கி ஓட்டு 16.22%,
திருவள்ளூர் பொன் பாலகணபதி வாங்கி ஓட்டு 15.86%,
விருதுநகர் ராதிகா சரத்குமார் வாங்கி ஓட்டு 15.58%,
சிதம்பரம் கார்த்திகாயினி வாங்கி ஓட்டு 14.44%,
திருவண்ணாமலை அஸ்வத்தாமன் வாங்கி ஓட்டு 13.67%,
நாகப்பட்டினம் ரமேஷ் வாங்கி ஓட்டு 10.50%,
நாமக்கல் கே.பி ராமலிங்கம் வாங்கி ஓட்டு 9.12%,
கரூர் செந்தில்நாதன் வாங்கி ஓட்டு 9.5%.
தமிழ்நாட்டில் நாமக்கல், கரூர் இரண்டு தொகுதிகளில் ஒன்பது சதவீத வாக்குகளை மட்டும் தான் பெற முடிந்தது. தமிழகத்தில் போட்டியிட்ட 19 வேட்பாளர்களில் ஒருவர் கூட 40% வாக்குகளை தொட முடியவில்லை. இதிலிருந்து பி.ஜே.பி தமிழகத்தில் ஒருபோதும் வளராது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.
மதுரையில் போட்டியிட்ட பேராசிரியர் சீனிவாசன் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற ஒரு கட்சி இருக்காது என்று பகிங்கரமாக எடப்பாடிக்கு மிரட்டல் விடுத்தார். அதை தவிர திருவள்ளூரில் போட்டியிட்ட பொன் பாலகணபதி தேவர் ஜெயந்தி விழாவில் முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தொகுதி மக்களிடையே முகத்தில் காரிவுமிழும் அளவிற்கு வைரலானது.
வாய் கிழிய சமூக வலைதளங்களில் மார்தட்டி பேசிய அசுவத்தாமனின் நிலைமை அந்தோ பரிதாபமாக இருந்தது. அண்ணாமலை தோல்வியை கொண்டாடும் விதமாக ஆட்டுக்குட்டியை பிரியாணி போடும் வீடியோக்களும் மோட்டார் பைக்கில் சிக்கி கழுத்தை அறுபடும் வீடியோக்களும் ஆட்டை வேண்டுதலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதைப் போல ஆட்டை பலிகடா ஆக்குவதைப் போல பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.