chennireporters.com

நயன்தாராவை ஓரங்கட்டும் பாலிவுட் நடிகை.

தென்னிந்திய சினிமாவில் வட இந்திய நடிகைகளின் வருகை அதிகரித்து வருகிறது.அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகை கியாரா அத்வானி.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது.இப்படத்தில் ராம் சரணிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை “கியாரா அத்வானி” நடிக்கிறார்.

பல தெலுங்கு படங்களில் கியாரா அத்வானி நடித்திருந்தாலும் பாலிவுட் படங்களில் பிசியான பின்னர் தெலுங்கு சினிமாவை அவர் கண்டுகொள்ள வில்லை.

தொடர்ந்து ஹிந்தி தொடர்கள் மற்றும் படங்களில் துணிச்சலான கதாபாத்திரத்தில்நடித்து வந்த கியாராவை, ராம் சரண் நடிக்கும் படத்திற்காக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்கிறார் இயக்குனர் சங்கர்.ராம் சரண் 15’ படத்தில் சிறப்பாக நடித்து நல்ல பெயரையும் சம்பளமும் வாங்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் கியாரா அத்வானி.

இவரின் சம்பளத்தை கேட்டால் தான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.சங்கர் மற்றும் ராம்சரண் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் நடிக்க சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம் கியாரா அத்வானி.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது.இந்த சம்பளம் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவை விட அதிகம் என்று கூறுகிறார்கள் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பெயரை கியாரா அத்வானி பெற்று விடுவார் என்றும் தமிழ் சினிமாவில் நயன்தாராவின் மார்கெட் குறைந்து விடும் என்று தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவின் முதல் படத்தில் அறிமுகமாகும் கியாரா அத்வானி தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடிப்பார் என்கிறது சினிமா வட்டாரம்.

இதையும் படிங்க.!