பெரம்பூரில் வீட்டருகே நின்று கொண்டிருந்த ஆர்ம்ஸ்ட்ராங்கை இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் வெட்டியுள்ளனர். ஆபத்தான நிலையில் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர் பெரம்பூர் ஆம்ஸ்ட்ராங்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்
இவர் பூந்தமல்லி பூவை மூர்த்தியாரின் சிஷ்யனாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். மூர்த்தியார் தற்கொலை செய்யப்பட்டதற்கு பிறகு அவரின் வாரிசாகவே வலம் வந்தவர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக இருந்த மாயாவிதியின் செல்லப் பிள்ளையாக தமிழகத்தில் வலம் வந்தவர். மாயாவதியின் அனைத்து பணத்தையும் பாதுகாத்து வரும் தமிழகத்தின் தலைவராக பெயர் பெற்றவர் இவர். தனது சொந்த சாதி கட்சி சேர்ந்த ரவுடிகளையே கூலிப்படையினர் மூலம் பல கொலைகளை செய்து வந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்
உதாரணத்துக்கு வெள்ளை உமா என்கிற உமாவை இவர்தான் கொலை செய்தார் என்று வெள்ளை உமாவின் ஆட்கள் வெளிப்படையாகவே 2013 ஆம் ஆண்டு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பேட்டியளித்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பூவை மூர்த்தியாரின் நினைவு நாளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் வரை போஸ்டர் ஒட்டி தமிழக தலித் மக்களிடையே பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தென் மாநில மக்களிடையே ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பேசி வந்ததால் இவரை தென் மாவட்டத்தைச் சேர்ந்த பல முக்கிய சமூகத்தினர் இவரை கொலை செய்ய பல வருடங்களாக முயற்சி செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று பெரம்பூர் அருகே இவர் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த பத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அவரை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகு வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறந்து போன ஆம்ஸ்ட்ராங்கிற்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்படுவார் என்று உளவுத்துறை அதிகாரிகள் அரசுக்கு அறிக்கையை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்துக்கிடையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் பெரும் கலவரம் ஏற்படும் என்று உளவுத்துறை அதிகாரிகள் அரசுக்கு அறிக்கையை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் மேற்கண்ட மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டது தொடர்பாக அவரது மரணத்திற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்த வருவதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.