கடந்த திமுக ஆட்சியில் செல்வ செழிப்பாக இருந்த அமைச்சர்களில் மூடி சூடா மண்ணனாக திகழ்ந்தவர். தமிழ்நாட்டின் மொத்த வருவாயும் வழித்து தின்றவர். இவரால் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களை நிரப்புவதில் சுமார் 888 கோடி ரூபாய் அளவுக்குப் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்து எஃப்.ஐ.ஆர் (FIR) தாக்கல் செய்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.
இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை (ED) திரட்டிய 232 பக்கங்கள் கொண்ட டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்களை மாநிலப் போலீசாருக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்யக் கோரி கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இரண்டு முறை கடிதங்கள் அனுப்பியும் முந்தைய திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் அதை நிலுவையில் வைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பத்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதற்கட்ட விசாரணை என்ற பெயரில் வழக்குப் பதிவைத் தாமதப்படுத்தக் கூடாது எனக் கூறி, கடந்த 2026 பிப்ரவரி 20 அன்று கே.என்.நேருவுக்கு எதிராக உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசும், கே.என்.நேருவும் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததோடு, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் விசாரணைக்கு வந்த சூழலில், தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இந்த ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லஞ்சம் வாங்க தெரியாத அதிகாரிகள் கூட லட்சக்கணக்கில் வாங்கி கோடிகள் சம்பாதித்தவர் கள். இவரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தினால் 20 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் பட்ஜெட்டை சரி செய்து விடலாம்
20 வருடங்கள் அரசை நடத்தி விடலாம். ஒரு ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து மதிப்பு மட்டும் அதாவது ஒவ்வொருவருடைய தனி சொத்து மதிப்பு 150 கோடியை தாண்டும்.
பிரகாஷ் ஐஏஎஸ், சிவராசு ஐஏஎஸ், கார்த்திகேயன் ஐஏஎஸ் , பொன்னையா ஐஏஎஸ். போன்றவர்கள் சுருட்டிய பணம் மட்டும் 600 கோடி அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நகராட்சிகளின் கமிஷனர்கள் TPO, TPI, சுகாதாரத்துறை அதிகாரிகள் Health inspector என ஒவ்வொரு அதிகாரிகள் சம்பாதித்த சொத்து தமிழ்நாடு முழுவதும் ஒரு 1500 கோடி இருக்கும். செங்கல்பட்டு RDMA ஆக இருந்த சித்ராவின் சொத்து மதிப்பு மட்டும் ஏறக்குறைய 150 கோடி. இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தற்போது வரை நிலுவையில் உள்ளது.
150 கோடி லஞ்சப்பணம் வைத்துள்ள RDMA சித்ரா.
ADMA விஜயகுமார் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே இடத்தில் அதாவது ஒரு துறையில் பதவி வகித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் 200 கோடியை தாண்டும் என்கின்றனர் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள். ADMA விஜயகுமார் சம்பாதித்துள்ள சொத்துகளை மட்டும் விசாரிக்க தனி ஆணையமே அமைக்கவேண்டும் என்கின்றனர் துறை அதிகாரிகள். அது மட்டுமல்லாமல் தமிழக அரசு உடனடியாக ADMA விஜயகுமாரை பணி நீக்கம் செய்து அவரை கைது செய்து துறை ரீதியான நடவடுக்கை எடுத்து அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என்கின்றனர் எதிர்கட்சிகள்.
எனவே தமிழக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நேரு துறையில் நடந்த எல்லா ஊழல் வழக்குகளையும் அமலாக்கத்துறை விசாரித்து சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்கிற அழுத்தமான குரல் தமிழக வெற்றி கழகத்தில் எழுந்துள்ளது. 
இவர் நேரு சம்பாதித்த பல கோடி பணத்தை பார்ட்டி பண்டுக்கு வழங்க வேண்டும் என்று பலமுறை கட்சி தலைமை கேட்டதாக திமுகவில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களே சொல்லி வருகின்றனர்.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் மூலம் தான் சம்பாதித்த பணத்தை கட்சி தலைமை மிரட்டி ஏமாற்றி வாங்குகிறது என்பதை நீங்களே பேசி விடுங்கள் என்று சவுக்கு சங்கருக்கு நேரு பல லட்ச ரூபாய் பணம் கொடுத்து பேச சொன்னதாகவும் வெளிப்படையாக பேசுகின்றனர் சில உளவுத்துறை உயரதிகாரிகள். செய்தியில் நாம் குறிப்பிட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விஜயகுமார் மற்றும் RDMA சித்ரா ஆகியோர் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
