சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக அவர் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவ
மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு லேசான நெஞ்சுவலி வந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .
போலீஸ் கமிஷனருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.