chennireporters.com

கர்ப்பிணி பெண்ணிடம் வசூல் வேட்டை டாக்டரை டோஸ் விட்ட கலெக்டர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவை பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மருதமுத்து.இவரது மனைவி ராஜராஜேஸ்வரி வயிற்று வலி காரணமாக அருகில் இருந்த கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ராஜேஸ்வரிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட, அப்போது அவரை ஸ்கேன் எடுக்குமாறு அங்கிருந்தவர்கள் அறிவுறுத்தினர்.தொடர்ந்து தனியார் மையத்தில், கர்ப்பிணி பெண்ணுக்கு ஸ்கேன் எடுத்தனர்.

அப்போது வயிற்றில் இருக்கும் சிசு உயிரிழந்துவிட்டதாக அங்கிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

டாக்டர் ஜோதிமணி

ஆனால் பணியில் இருந்த டாக்டர் சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியுள்ளனர்.அங்கிருந்த பெண் மருத்துவர் ஜோதிமணியிடம் தெரிவித்தபோது, அவர் எவ்வித தகவலும்
சொல்லாமலும் சிகிச்சை அளிக்காமல் இருந்து வந்ததாக மருதமுத்து குற்றம் சாட்டினார்.

பின்னர் ராஜராஜேஸ்வரி அங்கு இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அந்த மருத்துவமனையில் ரூ. 37 ஆயிரம் முன் பணம் கட்டி, ஒரு மணி நேரத்தில் வயிற்றில் இறந்த நிலையில் இருந்த பெண் சிசு வெளியே எடுக்கப்பட்டது.

இந்த சிகிச்சை மேற்கொண்டது அரசு பெண் மருத்துவர் ஜோதிமணி என தெரியவந்ததால், மருதமுத்து அதிர்ச்சியடைந்தார்.

இந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த அவல நிலை குறித்து, மருத்துவர் ஜோதிமணி நடந்துகொண்ட விதம் குறித்து ஆட்சியர் சு.வினீத்துக்கு காரத்தொழுவை சேர்ந்தவர்கள் புகார் மனு அனுப்பினார்.

மனுவை பெற்ற ஆட்சியர் உடனடியாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மற்றும் உடுமலை கோட்டாட்சியர் விசாரிக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இணை இயக்குநர் உடுமலை அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து பெண் மருத்துவர் ஜோதிமணியை தாராபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம், நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பெண் மருத்துவரை இடமாறுதல் செய்தனர்.

அரசு மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, அங்கு அரசு மருத்துவர்ஜோதிமணி சிகிச்சை அளித்ததோடு சிகிச்சை கட்டணம் ரூ.37 ஆயிரம் வசூலித்துள்ளார்.

இந்நிலையில், அரசு மருத்துவர் ஜோதிமணியிடம் 37 ஆயிரத்தை வசூல் செய்து, பணம் கட்டிய மருதமுத்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் உத்திரவிட்டுள்ளார்.

அதிரடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் விண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு மருதமுத்து குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க.!