chennireporters.com

இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஏப்ரல் 19 அன்று சி.பி.ஐ.(எம்) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் பேசுகையில், இந்தி தான் இந்தியாவின் மொழி என்றும், தேசிய மொழியைப் பயன்படுத்தினால் தேசம் வளர்ச்சி காணும், ஜனநாயகம் தழைத்தோங்கும், ஒரு தேசம் தனது மொழியை இழக்கும் போது.

கலாச்சாரத்தையும், சுய சிந்தனையையும் இழந்துவிடும் என்று கூறியதோடு, இந்தி இணைப்பு மொழியாகும் தருணம் வந்துவிட்டது என முன்வைத்திருக்கிறார்.

இரண்டு மாநிலங்களுக்குள் இனி கடித போக்குவரத்து அனைத்தும் இந்தியில்தான் இருக்க வேண்டுமெனவும் முன்மொழிந்துள்ளார்.

இதன் மூலம் அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் என்பது நிராகரிக்கப்படுகிறது.

மொழிவாரி மாநிலம் என்கிற ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தியலும், மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா, பன்மைத்துவமே இந்திய ஒற்றுமையின் அடிப்படை என்கிற கூட்டாட்சி கோட்பாடும் சிதைக்கப்படுகின்றன.

அரசமைப்பு சட்டம் அவமதிக்கப்படுகிறது ஆரம்பம் தொட்டே ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் முந்தைய உருவமான ஜனசங்கம் ஆகியவை இந்திய அரசமைப்புச் சட்டம், இந்திய தேசிய கீதம், இந்திய தேசிய கொடி, இந்திய மொழிக்கொள்கை ஆகியவற்றை நிராகரித்தே வந்துள்ளன.

இடைக்காலத்தில் இந்தி இறுதியாக சமஸ்கிருதம் என்பதே ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்பாடு. இதன் அடிப்படையில் பன்மைத்துவத்தை மறுதலித்து ஒற்றைத்துவத்தை நடைமுறைப்படுத்தும்.

முயற்சியே அமித்ஷா உரையின் உள்ளடக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மாநில செயற்குழு இதை வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் அலுவல் மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் இருக்க வேண்டுமென்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் நிலைபாடாகும்.

அந்நிலை வரும்வரை இரு மொழிக் கொள்கை தான் இருக்குமே தவிர இந்தியைத் திணிக்கின்ற மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது.

எந்த மொழியையும் அவமதிக்கும் நோக்கம் நமக்கு இல்லை. ஆனால் ஒரு மொழியைத் தூக்கிப் பிடிப்பதற்காக அனைத்து மொழிகளையும் மிதிப்பதற்கு ஒன்றிய அரசு முயற்சித்தால் அதற்கு கிஞ்சித்தும் இடமளிக்க முடியாது.

இத்துடன், மத்திய பல்கலைக்கழகங்களில் இனி நுழைவுத் தேர்வு (CUET) நடைமுறைக்கு வரும் என்கிற அறிவிப்பும், நீட் போலவே, பல்வகைப்பட்ட கற்றல் முறைகளை நிராகரித்து, தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளை லாபம்.

அடிக்க வழிவகை செய்யும். உயர்கல்வி மட்டுமல்ல, மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கும் ஏழை எளிய மாணவர்கள், மாணவிகள் வருவதை சீர்குலைக்கும்.

தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வழிமொழிகிறது. ஏற்கனவே நீட் தேர்விற்கு விதி விலக்கு வேண்டுமென்று.

கே.பாலகிருஷ்ணன்

போராடி வரும்போது, ஒன்றிய அரசு பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புக்கு உட்பட நுழைவுத் தேர்வு என அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

எனவே, இதர மொழி பேசும் மக்கள் மத்தியில் இந்தியைத் திட்டமிட்டு திணிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டுமெனவும்.

வலியுறுத்தி, தேச ஒற்றுமையையும், மாநில உரிமைகளையும் பாதுகாத்திட சிபிஐ(எம்) கட்சி கிளைகள் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்.

இதற்குத் தமிழக மக்கள் முழு ஆதரவு தர வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

கே.பாலகிருஷ்ணன்

மாநில செயலாளர்

இதையும் படிங்க.!