chennireporters.com

தமிழ்நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவிற்கு குவியும் வாழ்த்துகள்…!!

நேர்மைக்கு கிடைத்த கவுரவம் என தமிழினியன் நெகிழ்ச்சி…

திரு. அசன் முகமது ஜின்னா அவர்கள் தமிழ்நாட்டின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி ஏற்றுள்ளார்.

தொடர்ந்து உழைப்பும், உண்மையும்,நேர்மை உணர்வும், நேர்மறை எண்ணமும் நிச்சயம் வெற்றி தரும் என்பதன் மிகச்சிறந்த அடையாளம். அவரது நியமனம்.

அசன் முகமது ஜின்னா,திருவாரூர் மாவட்டம், அத்திக்கடை கிராமத்தில் 1977-ல், வழக்கறிஞர் அசன் முகமது, தாஜூனிஷா ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.

இவரது தந்தை திரு. அசன் முகமது அவர்கள், நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.கவிஞர், எழுத்தாளர், முரசொலி இதழில் பல படைப்புகளை எழுதியவர்.

தமிழ்நாட்டின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா.

ஜின்னா அவர்கள் தனது பள்ளிப் படிப்பை நாகப்பட்டினம் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியிலும், கலைஞர் படித்த திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நிறைவு செய்த பின்,

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தவர்.1999-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தவர்.தொடர்ந்து முதுகலை சட்டப் படிப்பை (எம்.எல்) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.

முதலில் நாகப்பட்டினத்திலும் தொடர்ந்து சென்னையிலும் வழக்கறிஞராகப் பணி செய்யும் இவர், பல முக்கியமான பொது நல வழக்குகளில் ஆஜராகி ஏழைகளுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ளார்.

அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவம் பெற்ற பல வழக்குகளில் ஆஐராகி வெற்றி பெற்றுள்ளார் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு தரமான வசதியான கட்டடங்கள் கிடைக்கச் செய்தவர்.

தமிழகத்தை உலுக்கிய சரிகா ஷா மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணமான சமூக விரோதிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தவர் பெண் உரிமைகளுக்காக தொடர்ந்து பணியாற்றுபவர்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசும் ஆற்றல் பெற்றவர் தமிழ்நாடு வக்ஃப் போர்டு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் வழக்கறிஞராக ஆஜராகி உள்ளார்.

2001-ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை பீடம் இடிக்கப்பட்டு, சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, பொதுநல வழக்குத் தொடர்ந்து “வழக்கு முடியும்வரை கண்ணகி சிலையை அரசு பாதுப்பாக வைக்க வேண்டும்” என்ற இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் தமது வாதத்தால் பெற்றவர்.

அதன் அடிப்படையில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் பழைய பொருட்களுக்கான அறையில் வைக்கப்பட்டிருந்த கண்ணகி சிலை, 2006-ல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க.அரசு அமைந்ததும் மீண்டும் நிறுவப்பட்டது.

அதன் திறப்பு விழாவில்,அசன் முகமது ஜின்னாவின் சட்டப் பணியைக் குறிப்பட்டுப் பாராட்டினார் கலைஞர் என்பது கூடுதல் சிறப்பு.

2012ல் தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல ஊர்களில் அனைத்துலக மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை பங்கேற்க வைத்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் உயர்திரு மு.க.ஸ்டாலின் அவர்களும் தலைமையேற்று நடத்திய தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டின் (டெசோ) வெற்றிக்கு உழைத்தவர்களில் ஒருவர்.

‘இளம் அரசியல் தலைவர்’ என்று அமெரிக்க கவுன்சிலால் கவுரவிக்கப்பட்டிருக்கிறார் ஜின்னா 2004-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு நல்லுறவுப் பயணமாக அனுப்பி வைக்கப்பட்ட இளம் தலைவர்கள் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து,

இடம் பெற்ற முதல் இளம் தலைவர் என்ற பெருமைக்குரியவர்.ஐ.நா.சபையின் யுனஸ்கோ அமைப்பில் (மனித உரிமைகள் தகவல் தொழில்நுட்ப பிரிவு) ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இவரது நியமனம் குறித்து “யுனெஸ்கோ” அமைப்பு தனது இணையதளத்தில்”நன்கு படித்த, சமூக அக்கறை கொண்ட, பெண்கள் முன்னேற்றதுக்காக பாடுபடும் இளம் அரசியல் தலைவரான ஜின்னாவின் நியமனம்,ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவும்,”என்று குறிப்பிட்டிருந்தது.

நாமும் வாழ்த்துவோம்.

நன்கு படித்த சமூக அக்கறையும், பெண்கள் பாதுகாப்பு,
இளைஞர்கள் முன்னேற்றம், ஆகியவற்றிலும் அக்கறை கொண்ட வழக்கறிஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்களின் நியமனம் இளம் வழக்கறிஞர்களின் இதயத்தில் நம்பிக்கையை விதைக்கட்டும்.

   வாழ்த்துக்களுடன்…
  தமிழினியன்

இதையும் படிங்க.!