Chennai Reporters

கட்டிங் பேசும் தி.மு.க. அமைச்சரின் (பி.ஏ) மதன் குப்புராஜ்.

தாசில்தார் மதன் குப்புராஜ்.

நில உரிமையாளர்களிடம் வீட்டுமனை அங்கீகாரம் பெற வீட்டுவசதி துறை அமைச்சர் ஈரோடு முத்துசாமியின் மூன்றாவது ஜூனியர் பி.ஏ.வாக இருக்கும் மதன் குப்புராஜ் கட்டிங் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

யார் அந்த மதன்?

இதோ மதனின் பிளாஷ்பேக்….

மதன் குப்புராஜ் தனது 17 வயதில் ரெக்கார்ட் கிளார்க்காக வருவாய்த்துறையில் வேலைக்கு சேர்ந்தவர். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய திறமையின் மூலம் தாசில்தாராக உயர்ந்தவர்.

தற்போது வீட்டு வசதித்துறை அமைச்சர் ஈரோடு முத்துசாமிக்கு மூன்றாவது ஜூனியர் பி.ஏ வாக வேலை பார்த்து வருகிறார்.பரபரப்புக்கும் அதிரடிக்கும் பெயர்போன துடிப்பு மிக்க இளைஞன்.

வீட்டு வசதித்துறை அமைச்சர் ஈரோடு முத்துசாமி

இளம் வயதிலேயே ஊழலை எப்படி செய்ய வேண்டும் கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் கையெழுத்தை எப்படி கள்ளத்தனமாகபோட வேண்டும் என்பதை திறம்பட கற்று தேர்ந்தவர்.

அதிகாரிகளின் கையெழுத்தை அப்படியே ஜெராக்ஸ் மிஷினைப்போல போடும் திறன் படைத்தவர். லஞ்சம் எப்படி வாங்க வேண்டும் என்பதை தமிழகம் முழுவதிலும் உள்ள அதிகாரிகள் மதன் இடத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

அவ்வளவு திறமை மிக்க அதிகாரி லஞ்சம் வாங்குவதில் இவரைப்போல தமிழகத்தில் ஒருத்தரும் இருக்க முடியாது.

தமிழகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரிடம் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு தனது டேபிள் மீது வைத்து பிலிம் காட்டும் கெட்டிக்காரர்.

பொதுமக்களையும் அரசியல்வாதிகளையும் மிரட்டும் திறன் படைத்தவர்.இவர் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.வழக்கு ஒன்று மோரை கிராமத்தில் போலியான பட்டாக்களை உருவாக்கி கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

அது தவிர நொளம்பூர் காவல்நிலையத்தில் போலி வாரிசு சான்றிதழ் கொடுத்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசில் நிலுவையில் இருக்கிறது.இதுதவிர உயரதிகாரிகளை இழிவாகவும் அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . ஆர்.டி.ஒ ஒருவர் திருவள்ளூர் எஸ்.பி. ஆபிசில் புகாரும் கொடுத்துள்ளார்.

அவர் மீது துறை ரீதியாக ( 17, a) சார்ஜ் நிலுவையில் இருக்கிறது.முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்னுக்கு மிகவும் நெருக்கமானவர்.அவர் சொன்ன ஆட்களுக்கு எல்லாம் போலியான ஆவணங்கள் மூலம் பல இடங்களை பட்டா போட்டுக் கொடுத்தவர்  இவருக்கு தமிழகத்தின் பல முக்கிய பகுதிகளில் கெஸ்ட் ஹவுசூம் இடங்களும் இருக்கிறது.

சென்னை முகப்பேரில் ஒரு வீடும், திருவள்ளூரில் ஒரு வீடும் திருவேற்காட்டில் ஒரு வீடும் இருக்கிறது  இவர் தற்போது வீட்டுவசதி துறையில் லே அவுட் அனுமதி கேட்டு வரும் நில உரிமையாளர் மற்றும் புரோக்கர்களிடம் கட்டிங் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் வீட்டுவசதி வாரிய இயக்குனருக்கு எவ்வளவு தரவேண்டும். எத்தனை குறி போடுவார் அதை சரி செய்யவேண்டும்.என்னுடைய பங்கு எவ்வளவு என்பதை நான் பிறகு சொல்லுகிறேன்.

5 லட்சம் சதுர அடிக்கு குறைவாக இருந்தால் ரமணி என்பவரே செய்து முடித்துக் கொடுப்பார்.எனக்கு ஸ்வீட் எல்லாம் வேண்டாம்.பேப்பர் தான் முக்கியம் என்று சிரித்துக் கொண்டே மதன் பேசும் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இவர் செய்துள்ள முறைகேடுகள் பலவற்றை மாவட்டத்தில் கேட்டால் இவரது வரலாற்றை பக்கம் பக்கமாய் சொல்லுவார்கள் .

இவரைப் பற்றி வாசகர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் தற்போதைய உள்துறை செயலாளர் (எஸ்.கே.பிரபாகர்) சுந்தரவல்லி, மகேஸ்வரி ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!