chennireporters.com

#dravidar Kazhagam condemn;ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திராவிடர் கழகம் கண்டனம்.

தமிழ்நாடு ஆளூநர் ரவிக்கு விடுதலை நாளேடு கண்டனம் தெரிவித்து தலையங்கம் எழுதியுள்ளது.

“தமிழ்நாட்டுக் கல்வித்தரம் குறைந்ததா ? ஆளுநருக்குப் பதிலடி!”
‘‘வாய்ப்புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ’’ என்ற பழமொழி, யாருக்குப் பொருந்துமோ, பொருந்தாதோ, அது கண்டிப்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நூறு விழுக்காடு பொருந்தும்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லிக்கு பயணம்! - TN Governor  Delhi visit

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி

பதவிக் காலம் முடிந்தும் பதவியில் நீடிக்கும் அபார சட்ட விதிகள் பா.ஜ.க. ஆட்சியில் மட்டுமே நடக்கக் கூடியது. தமிழ்நாட்டில் ‘உண்மையான’ ‘எதிர்க்கட்சித் தலைவர் யாரென்றால் இந்த ஆளுநர்தான்.
தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்து விட்டதாம். பிஜேபி ஆளும் வடமாநிலங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் கடுமையான தோல்வியைக் கண்டு நகைக்கும் நிலையில், இப்படிக் கூறுவது – எந்த அடிப்படையில்?

K. Veeramani honoured with Dr. Narendra Dabholkar Memorial Award

விடுதலை திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி

முதுநிலைக் கல்வியில் 50 விழுக்காட்டை எட்டும் முதல் மாநிலம் தமிழ்நாடு! தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்து அறிவியல் சாதனை புரிந்த – புரிந்துவரும் விஞ்ஞானிகளை அறிவாரா ஆளுநர் விஞ்ஞானி?
சந்திரயான் 1, சந்திரயான் 2, சந்திரயான் 3, மங்கள்யான் ஆதித்யா எல் 1 ஆகிய விண்வெளித் திட்டங்களின் முக்கியப் பொறுப்புகளில் சிறந்து விளங்கியவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த குறிப்பாக அரசுப் பள்ளியில் பயின்ற நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவர்களே!

Mayil samy annadurai is telling about Moon | நிலவின் தென்துருவத்தில் நீர்,  வாயு, கனிமங்கள் இருக்க வாய்ப்பு; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

மயில்சாமி அண்ணாதுரை

மயில்சாமி அண்ணாதுரை: 2008 ஆம் ஆண்டிலேயே சந்திரயானை இஸ்ரோ நிலவுக்கு ஏவி சாதனைப் படைத்தது. ‘சந்திரயான்-1’ என்றழைக்கப்படும் அந்தத் திட்டத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை. இவர், கோவை மாவட்டம் கோதாவடி கிராமத்தைச் சேர்ந்தவர். அரசுப் பள்ளியில் படித்து, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்து, 1982இல் இஸ்ரோ வில் அடிப்படை ஆய்வாளராகப் பணியில் இணைந்தார். அங்கு சிறப்பாகப் பணியாற்றிப் படிப்படியாக முன்னேறி, ‘சந்திரயான்-1’ திட்டத்தின் இயக்குநராக உயர்ந்தார். இதனால், ‘நிலவு மனிதன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

குறுகிய காலத்தில், குறைந்த செலவில் வெற்றிகரமாக நிலவில் பாய்ந்த ‘சந்திரயான்-1’ உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. தொடர்ந்து செவ்வாய்க் கோளை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலக் குழுவிலும் பங்காற்றினார்.

இஸ்ரோவின் சாதனைக்கு வித்திட்ட தமிழர்கள்..!!

சுப்பையா அருணன்

அருணன் சுப்பையா : அமெரிக்கா, ரஷ்யா, அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு மய்யங்கள் மட்டுமே செவ்வாய்க் கோளுக்கு விண்கலன்களை அனுப்பி இருந்த நிலையில், 2013 இல் இந்தியாவும் அதில் சேர்ந்தது. ‘மங்கள்யான்’ என்று பெயரிடப்பட்ட அந்தத் திட்டத்தின் இயக்குநராக செயல்பட்டவர்

அருணன் சுப்பையா. நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கோதைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர். திருக்குறுங்குடி கிராமத்தில் தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, கோவையில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர். திருவனந்தபுரத்தில் இஸ்ரோவின் கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யத்தில் 1984 இல் பணியைத் தொடங்கினார். உழைப்பாலும், முயற்சியாலும் அவருக்கு 2013இல் மங்கள்யான் திட்ட இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முயற்சியிலேயே அந்த விண்கலத்தை வெற்றிப் பயணத்தில் சேர்த்தார். 8 ஆண்டுகள் செவ்வாய்க்கோளைச் சுற்றிவந்த மங்கள்யான் பல அரிய படங்களை அனுப்பியது. 2022இல் மங்கள்யான் விண்கலத்தின் பயணம் முடிவுக்கு வந்தது.

K. Sivan - Wikipedia

கே.சிவன்

கே.சிவன் :கடந்த 2019 இல் ‘சந்திரயான் 2’ விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டபோது, இஸ்ரோவின் தலைவராக இருந்தவர் கே. சிவன். கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத் தில் பிறந்த சிவன், அரசுப் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாக உயர்ந்தார். மேற்படிப்புகளை முடித்து 1982இல் இஸ்ரோவில் இணைந்தார்.

இஸ்ரோவின் முக்கியத் தயாரிப்புகளான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் கட்டுமானம், சந்திரயான் விண்கலம் ஆகியன தொடர்பான பணிகளிலும் சிவனுக்குப் பெரும் பங்குண்டு. இதனால் ‘இஸ்ரோவின் ராக்கெட் மனிதர்’ என்றழைக்கப்படுகிறார். கடின உழைப்பால் 2018இல் இஸ்ரோவின் தலைவரானார்.

Chandrayaan 3: சந்திராயன் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர்... இஸ்ரோ  விஞ்ஞானி வீர முத்துவேல்!

பி.வீரமுத்துவேல்: நிலவின் தென் துருவத்தைச் சென்றடைந்த நாடு என்ற பெருமை ‘சந்திரயான்-3’ மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் பெருமைக்குரிய திட்டத்தின் இயக்குநராகப் இருப்பவர் பி.வீரமுத்துவேல். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளியில் படித்தவர். பள்ளிக் காலத்தில் தான் ஒரு சராசரி மாணவனாக இருந்ததாகச் சொல்லும் அவர், சென்னையில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டப் படிப்பை முடித்தார்.

பிறகு திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரி (என்.அய்.டி.)யில் மேற்படிப்பை முடித்தார். வளாக நேர்காணலில் தேர்வாகி கோவையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, விண்வெளி ஆராய்ச்சியின்மீது ஆர்வம் ஏற்பட்டது. பெங்களூருவில் ‘ஹெலிகாப்டர் டிவிஷனில்’ பணியைத் தொடங்கி பின்பு இஸ்ரோவில் இணைந்தார்.

ஆதித்யா எல்-1' விண்கல திட்ட இயக்குநராக தமிழக பெண் விஞ்ஞானி! யார் இவர்? -  லங்காசிறி நியூஸ்நிகார் சுல்தானா

நிகார் சுல்தானா: பரிதியை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் சென்றது இந்தத் திட்டத்தின் தலைவர் தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த பெண் அறிவியலாளர் நிகார் சுல்தானா. செங்கோட்டை கீழ பள்ளிவாசல் தெருவை சேர்ந்த இணையர் சேக் மீரான் மற்றும் மற்றும் சைதுன்.

இவர்களது மூன்றாவது மகள் நிகார் சுல்தானா. இவர், தனது பள்ளிப்படிப்பை செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முடித்தார். இதன் பின்னர், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்து, பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் பயின்றார். இதனைத் தொடர்ந்து, இஸ்ரோவில் சேர்ந்து தனது பணியைத் தொடங்கினார்.
21 ஆம் நூற்றாண்டில் உலகிற்கே பெரிய விண்வெளி சாதனைகளை நடத்திய இந்தியர்களில் முக்கியமானவர்கள் அனைவருமே தமிழர்கள். அதுவும் அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் கற்றவர்கள்.தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை விமர்சிக்கும் ஆளுநரின் தகுதி எத்தகையது என்பதை இவர்களின் மூலம் அறிந்து கொள்ளலாமே!

 

இதையும் படிங்க.!