திருவள்ளூர் அருகே சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலங்களை போலி ஆவணங்கள் தயார் செய்து தனது பினாமி பெயரில் வைத்துக்கொண்ட வருவாய் துறை அதிகாரி பற்றி தமிழக அரசுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.


கடந்த 2011 முதல் 2019 வரை நடந்த நெடுஞ்சாலைத்துறை சென்னை முதல் திருப்பதி வரை நெடுஞ்சாலை அமைத்தல் விரிவாக்க பணியில் தொழுவூர், செவ்வாப்பேட்டை, அயத்தூர் 87, வேப்பம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள முக்கிய பெரும் புள்ளிகள் அனைத்து DTCP ரோடு, பஞ்சாயத்து ரோடு அனைத்து அரசுக்கு சொந்தமான ரோடுகளை தங்கள் பினாமி பெயரில் கிரயம் செய்து சுமார் 150 கோடிக்கு மேலாக மெகா ஊழல் செய்துள்ளனர். அதாவது ஏறக்குறைய 1 லட்சம் சதுர அடிக்கு மேல் போலியான ஆவணங்களை தயாரித்து தனது பினாமி பெயரில் வைத்துகொண்டு விற்பனை செய்து வருகிறார் ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ ராமசாமி என்கின்றனர் அந்த பகுதி மக்கள். 

ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ ராமசாமி.
ஆகையால் அவர்களிடம் இருந்து அரசுக்கு சொந்தமான பணத்தை திரும்ப பெற்று மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் இந்த பணத்தை அந்த கிராம பஞ்சாயத்துக்கு பயனுள்ள வகையில் மீட்டு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. அப்படி இல்லாத பட்சத்தில் அந்த அரசு நிலங்களை மீட்டு அந்த சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து கிராமத்திற்கு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொழுவூர் சர்வே எண் 615, 68, சரஸ்வதி நகர், கங்கா நகர், செவ்வாப்பேட்டை; சர்வே நம்பர்- 40,46,49- சக்திவேல் நகர், 41 சாலை வாய்க்கால், 38 பொதுப்பணித்துறை, 47- கங்கா நகர் அனக்ஸ், 48 குட்டை, 919 கங்கா நகர், 314, 115 ஓம் சக்தி நகர், 116 117 127 ஓம் கணபதி நகர் ,121,122, 123,124 திலக் நகர், 126 கங்கா நகர், 126 சரஸ்வதி நகர், 109 கங்கா நகர் அனெக்ஸ், 4 அலெக்ஸ் அஞ்சு 108 வழி பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது, ஏழு பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது ,அயத்தூர் சர்வே நம்பர், 103, 60 சென்ட் சர்வே நம்பர் ,226/171, 383, 227, வண்டிப் பாதை 33 சென்ட், 121 வண்டி பாதை ,27 சென்ட் வேப்பம்பட்டு, 64 பார 1A, 1A, A 1A, 1A 76 சென்ட் சர்வே நம்பர் 62, 17, 43 சென்ட் வண்டி பாதை எண்பத்தி ஆறு சென்ட்டு கிரீன்லேன்டு லே-அவுட் என பல இடங்கள் பினாமி பெயரில் போலியான ஆணங்கள் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்.
இந்த புகார் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உடனடியாக தனி விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து மாவட்ட முன்னாள் வருவாய் துறை அலுவலர் ராமசாமி, திமுக ஒன்றிய சேர்மனின் கணவர் ஆகியோர் அவர்கள் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
