chennireporters.com

இளம் பெண்ணின் உயிரை காப்பாற்றிய துபாய் விமானப்படை. குவியும் பாராட்டு க்கள்.

சிகிச்சைக்காக துபாயிலிருந்து ஐரோப்பிய நாட்டிற்கு விமானத்தின் மூலம் சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு திடீரென உடல்நிலை மோசமானதால் ஹெலிகாப்டர் மூலமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய விமானப்படை போலீசாருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இஸ்ரேலில் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த ஐரோப்பாவை சேர்ந்த பெண்மணிக்கு அவருடைய சொந்த ஊரில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பம் முடிவு செய்து இருந்தது.

ஆனால் பயணத்தின் போது பெண்மணியின் உடல்நிலை மோசமானதால் துபாய் காவல்துறையின் விமானப்படைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.

சற்று நேரத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறக்கப்பட்டது.

உடனடியாக பெண்மணியை எலிகாப்டர் மூலம் ரஷீத் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் காவல்துறையினர்.

இது குறித்து பேசிய விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் துபாய் காவல்துறையின் விமான படை தலைமை இயக்குனருமான கர்ணல் ஹலி முகமது பெண்மணியின் உடல்நிலை மோசமடைந்தது.

அதனால் பயணம் ரத்து செய்யப்பட்டு உடனடியாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

துபாய் காவல்துறையின் விமானப் படை அதிகாரிகளும் தயார் நிலையில் காத்திருந்தனர்.

சாலை கண்காணிப்பு ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற மனிதாபிமான சேவைகளில் துபாய் விமானப்படை தொடர்ந்து இயங்கி வருவதை அவர் நினைவு கூர்ந்தார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதும் துபாய் காவல்துறையினருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படிங்க.!