முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வரும் என்பார்கள். நாம் பிறருக்கு செய்கிற தீமை அது நமக்கே பின்னாலில் வந்து சேரும் என்பதை தான் இந்த இந்த பதிவு மனிதர்களுக்கு உணர்த்துகிறது. வயது முதிர்ந்த அப்பா தனது வீட்டில் எப்படி தினந்தோறும் அன்றாட வாழ்க்கையை எப்படி நடத்துகிறார் என்பது பற்றி இணையத்தில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
மொழியாக்கம் செய்யப்பட்ட வயது முதிர்ந்த அப்பா குறித்தான இந்த பதிவு அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தற்போது வைரலாகி வருகிறது.
நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு.
என் அப்பாவுக்கு வயதாகி விட்டது. அவர் வீட்டில் நடந்து செல்லும் போது சுவற்றைப் பிடித்துக் கொண்டுதான் நடக்கிறார். இதனால் எங்கள் வீட்டில் உள்ள சுவர்களின் நிறம் மாறி இருக்கிறது. அவர் தொட்ட இடமெல்லாம் அவரது கை ரேகைகள் சுவற்றில் பதிந்து கிடக்கிறது. இது என் மனைவிக்கு பிடிக்கவில்லை இதை அவள் கடுமையாக எதிர்த்து வந்தாள்.உங்கள் அப்பா இந்த வீட்டை அழுக்காகி விடுகிறார். எல்லா சுவற்றையும் கை வைத்தும் அவர் தலையில் தேய்க்கிற எண்ணெயை தலையணையிலேயும் சுவற்றிலேயும் பதிந்து கிடக்கிறது. இதனால் வீடு முழுக்க பல இடங்களில் கறைகள் உருவாகி அழுக்காவும் அசிங்கமாகவும் தெரிகிறது என்பாள்.
இதைப்பற்றி என் மனைவி என்னிடம் அடிக்கடி சண்டை போடுவாள். என் அப்பாவினால் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி நிறைய சண்டை ஏற்படுகிறது. இதனால் நான் சில சமயம் என் அப்பாவை கடுமையான வார்த்தைகள் பேசி அவரிடம் சண்டை போடுகிறேன். அவரிடம் முரட்டுத்தனமாக பேசி விடுகிறேன். இனிமே ஒழுங்கா நடங்க சுவற்றை புடிச்சுகிட்டு நடக்காதீங்க சுவற்றைப் பிடிக்காமல் தொடாமல் நடங்கள் என்று அவருக்கு அறிவுரை சொன்னேன்.
அவரும் சரி என்று சொல்லி என்னிடம் கண்ணீர் மல்க பேசினார். நான் வேண்டுமென்றா செய்கிறேன் என்னால் முடியவில்லை கண்ணா என்று கண்ணீர் மல்க என்னடம் சொன்னார். இருப்பினும் ஒரு முறை சுவற்றைப் பிடித்து நடக்காமல் நடந்த போது கீழே விழுந்து அவருக்கு தலையில் காயம் அடைந்தது.
நான் என் அப்பாவிடம் கடுமையாக நடந்ததைக் கண்டு வேதனை அடைந்தேன். வெட்கப்பட்டேன் ஆனால் அவரிடம் எதுவும் சொல்ல முடியவில்லை. நான் அவரிடம் கடுமையாக நடந்ததை கண்டு கதறி அழுதேன். என் அப்பா நடந்து செல்லும் போது சுவரை பிடிப்பதை நிறுத்தினால் ஒரு நாள் அவர் சம நிலையை இழுந்து கீழே விழுந்ததில் அவருடைய இடுப்பு எலும்பு உடைந்து போனது.
இருப்பினும் என் மனம் துடித்தது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இடுப்பு அறுவை சிகிச்சை செய்து அவரை சரிபடுத்திக் கொண்டு வந்தேன். இருந்தாலும் அவர் படுக்கை அறையில் நீண்ட காலம் படுத்திருந்ததால் அவர் உடல் நலம் குன்றி சில நாட்களில் இறந்து போனார்.
என் இதயத்தில் மிகுந்த குற்ற உணர்ச்சியால் துடித்தது. அவருடைய செயல்பாடுகளை ஒருபோதும் மறக்கவும் முடியாமல் கதறி அழுத்தேன். அவருடைய மறைவை எண்ணி நான் வருத்தப்பட்டேன். நான் செய்த தவறை மன்னிக்க முடியவில்லை. இறைவா என்னை மன்னித்துவிடு, என்று பலமுறை ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு கதறி அழுதேன்.
நான் சிறிய பிள்ளையாக இருக்கும் போது நானும் என் வீட்டில் உள்ள சுவற்றைப் பிடித்து தான் நடந்தேன். நான் கழித்த சிறுநீரையும் மலத்தையும் கையில் தொட்டு சுழற்றையும் என் வீட்டையும் பல இடங்களில் பல நாள் அழுக்கக்கினேன். அப்போதெல்லாம் என் அப்பாவும் அம்மாவும் என்னை குறை சொல்லாமல் அதை சகித்துக் கொண்டு என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருந்தார்கள். என்னை தூய்மையாக வைத்தது மட்டும் இல்லாமல் என்னை மிக அன்பானவனாகவே வளர்த்தார்கள்.
ஆனால் என் அப்பா வயது முதிர்ந்த பிறகு நான் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்காமல் என் அப்பாவிடம் நான் சண்டையிட்டது மிகவும் தவறு என்று இப்போது நினைக்கிறேன். என் தவறை நான் தற்போது உணர்கிறேன். என் அப்பாவின் மறைவுக்குப் பிறகு சில நாட்களுக்குப் பிறகு எங்கள் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க விரும்பினோம். வண்ணம் தீட்டுபவர்கள் வந்தபோது என் மகன் என்னுடைய அப்பாவை அதாவது அவனுடைய தாத்தாவை மிகவும் நேசித்தான்.
அவன் சுவற்றில் உள்ள என் அப்பாவின் கைரேகைகளை சுத்தம் செய்து அந்தப் பகுதியில் பெயிண்ட் அடிக்க அவன் அனுமதிக்கவில்லை. வண்ணம் தீட்டும் வேலைக்காரர்கள் மிகவும் நல்லவர்களாகவும் அன்பை விரும்புகிற மனிதர்களாகவும் இருந்த காரணத்தினால் அவர்கள் என் அப்பாவின் கைரேகை களை அழிக்காமல் அந்த இடத்தை சுற்றி சில ஓவியங்களை வரைந்து அழகாக்கி கொடுத்தனர் .
இதை பார்த்து என் மகன் சந்தோஷப்பட்டான். இறந்து போன அவரது தாத்தா தற்போது உயிரோடு இருப்பதாகவே அவன் கருதினான். அது ஒரு தனித்துவமான வடிவத்தை உருவாக்கியது. இதனால் என் மகன் அன்றைய நாளிலிருந்து மகிழ்ச்சியாக இருந்தான் அந்த அச்சுக்கள் தினம்தோறும் எங்கள் வீட்டில் ஒரு மகிழ்ச்சியான பகுதியாகவே மாறி இருந்தது. எங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் எங்கள் வீட்டு சுவரில் உள்ள என் அப்பாவின் கைரேகைகளை பார்த்து என்னை பாராட்டினார்கள். இப்படியே காலம் உருண்டோடியது தற்போது எனக்கும் வயதாகி விட்டது.
இப்போது என் மகன் இந்த குடும்பத்தின் தலைவனாகி விட்டான். அவன் வயது முதிர்ந்த இளைஞனாக முதிர்ந்து நிற்கிறான். நானும் என் அப்பாவை எப்படி நடத்தினேன்? அவருக்கு என்ன நடந்தது என்பதை நான் தற்போது அதை நினைவில் வைத்துக் கொண்டேன். யாருடைய ஆதரவும் இல்லாமல் நான் என்னுடைய வேலைகளை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். முயற்சித்தேன் ஆனால் முடியவில்லை.
என் மகன் இதை பார்த்தான் உடனே என் அருகில் வந்து நடந்து செல்லும் போது சுவர்களை தாங்கிப் பிடிக்க சொன்னான் நான் யாருடைய ஆதரவும் இல்லாமல் விழுந்து விடுவேனோ என்று அவன் கவலை பட்டான். என் மகன் என்னை பிடித்துக் கொண்டு இருப்பதை நான் உணர்ந்தேன். என் பேத்தி உடனடியாக முன்னோக்கி ஓடி வந்து தாத்தா என அன்பாக என்னை அரவணைத்துக் கொண்டு அவள் தோளில் என் கையை போட்டுக் கொண்டு என்னை மெல்ல நடக்க சொன்னாள்.நான் கிட்டத்தட்ட யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள்ளவே அழ ஆரம்பித்து விட்டேன். நான் என் தந்தைக்கு செய்திருந்த தவறை உணர்ந்தேன் கதறி, கதறி அழுதேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார் என் மனைவியும் நானும் அவரை அன்போடு பார்த்து இருந்தால் இன்னும் கொஞ்ச நாள் எங்களுடன் வாழ்ந்து இருப்பார். எங்களுக்கு அவர் ஒரு பெரிய வழிகாட்டியாக இருந்திருப்பார். என்பதை நாங்கள் மறந்து விட்டோம் ஒரு நாளைக்கு நமக்கும் இந்த நிலைமை வரும் என்பதை நாங்கள் மறந்து விட்டோம் தற்போது வயதான நிலையில் நான் என் தந்தையை நான் நினைத்து கதறி அழுகிறேன் கண்ணீர் விடுகிறேன் தேற்றுவதற்கு யாரும் இல்லை என் பேத்தியை தவிர.
நடக்க முடியாமல் இருந்த என்னை என் பேத்தி அவளது கைகளால் என் தோள் மீது போட்டு என்னை மெல்ல மெல்ல நடக்க வைத்து சோபாவில் என்னை உட்கார வைத்தாள், பின்னர் அவள் தனது ஓவிய புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள் அவளுடைய ஓவியா ஆசிரியர் அவள் வரைந்திருந்த படத்தைப் பார்த்து பாராட்டி அவளுடைய சிறந்த ஓவியத்தை பாராட்டி இருந்தார் .அதை என் பேத்தியிடம் என்னிடம் விளக்கிக் கூறினாள். அது என்ன ஓவியம் என்று கேட்டேன். அவள் வரைந்த ஓவியத்தை என்னிடம் காட்டினாள். அது எங்கள் வீட்டு சுவர்களில் என் தந்தையின் கைரேகை வைத்திருந்த தைத்தான் ஓவியமாக வரைந்திருந்தாள். என் மடியின் மீது வைத்து தாத்தா கண்ணாடியை நன்றாக துடைத்துக் கொண்டே பாருங்கள் என்று சொன்னாள் நான் பார்த்தேன் நான் இளைஞனாக இருந்த பொழுது என் அப்பா என் வீட்டு சுவற்றில் வைத்த அவரது இரண்டு கைகளின் ரேகைகளை அழகாக வரைந்து இருந்தாள்.
பார்த்த நிமிடத்திலேயே என் இதயம் பதறியது துடித்தது. குழந்தைகளாக இருக்கிற பொழுது தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களை அன்புடனும் பாசத்துடனும் நேசிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், அதை நாம் உணராமல் விட்டு விடுகிறோம் என்று எண்ணி நான் எனது அறைக்கு வந்து என் அப்பாவின் புகைப்படத்தை பார்த்து அவரிடம் மன்னிப்பு கேட்டு அழத்தொடங்கி விட்டேன். என் அழுகையை யாருமே ஆசுவாசப்படுத்த முடியவில்லை. என் மனைவியின் பேச்சைக் கொண்டு என் அப்பாவை நான் துன்பப்படுத்திய நாட்களை எண்ணி நான் அழது கொண்டு இருக்கிறேன்.
காலப்போக்கில் நமக்கும் வயதாகி விடும் நம் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை நாம் அன்புடன் கனிவுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். நம் குழந்தைகளுக்கும் நாம் முன்மாதிரியாக வாழ வேண்டும் அன்பையும் அரவணைப்பையும் பாசத்தையும் அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்பதை நான் என் பேத்திக்கும் என் பேரனுக்கும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
பணம் எப்போதும் அன்பையும் நேசிப்பையும் பாசத்தையும் தராது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். வயது முதிர்ந்த அப்பா அம்மாவை எப்போதும் துன்பப்படுத்தாமல் அவர்களை குழந்தையாக பார்த்து அவர்களின் முதுமை வரை அவரை நேசிக்க தொடங்குங்கள். அவர்களை குறையாகவும் அவர்கள் செய்யும் தவறை பெரிதுபடுத்தி பார்க்காமல் அன்புடன் அவர்களை நேசிக்க தொடங்குங்கள். அன்பு உலகத்தில் மிக அழகானது. அற்புதமானது.
தமிழ் மொழியில் ஒரு பழ மொழி உண்டு.
பழுத்த ஓலையை பார்த்து குறுத்து ஓலை சிரித்தது என்பார்கள். ஒரு நாள் இந்த குருத்து ஓலை பழுத்து விழும் என்பதை அது நினைக்காமலேயே போனது தான் பரிதாபம். ஒரு நாள் அந்த ஓலையும் பழுத்த ஓலையாகும் போது தான் பழமொழியின் பொருள் புரியும்.
பெற்றோர்களை வயது முதிர்ந்த காலத்தல் அன்புடன் நேசக்கத்தொடங்குங்கள். கனிவுடன் அவர்களை கவியுங்கள் காலம் உங்களை வாழ்த்தும்.