chennireporters.com

புலம்பெயர்ந்தவர்களிடம் கையேந்தும் இலங்கை அரசு.

இலங்கை தீவு தனது கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழந்து திவாலாகி விட்ட நிலையில் மத்திய வங்கி ஆளுநர் வெளிநாட்டில் வாழும் இலங்கையை சேர்ந்தவர்களிடம் உதவி கோரிக்கையை முன் வைத்து இருக்கின்றது

ஆனால் ராஜபக்சே குடும்ப உறுபினர்களுக்கும் அவர்களின் நண்பர்களும் மட்டும் கடந்த 17 ஆண்டுகளாக பெருமளவு அரச பொது நிதியை கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

குறிப்பாக ராஜபக்சே குடும்ப உறுப்பினர்களும் அவர்களின் நண்பர்களும் சட்டவிரோதமாக சம்பாதித்த 2 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றது.

இது போதாதென்று அரச பொது நிதியை சட்டவிரோதமாக செலவு செய்து இருக்கின்றார்கள். அந்தவகையில்,மகிந்த ராஜபக்சே தலைமையில் நடத்தப்பட்ட ‘தேசத்திற்கு மகுடம்.

கண்காட்சி நிகழ்வுகளை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட வீதிகள் நிர்மாணிக்கும் திட்டத்தில் மட்டும் 300 மில்லியன் ரூபா அரச பணம் திருடப்பட்டு இருக்கின்றது.

மஹிந்த ராஜபக்சே அவர்களின் ஏற்பாட்டில் கீழ் நிரமணிக்கப்பட்ட கொழும்பு முதல் கட்டுநாயக்க வரையான விரைவு வீதி அபிவிருத்தி திட்டத்திற்காக செலவு செய்யப்பட்ட 46.8 மில்லியன் பணத்திற்கு எவ் விதமான கணக்குகளும் இது வரை கிடையாது.

(இலங்கையில் ராஜபட்சேவின் பதுக்கல் 5000 ரூபாய்தாள் கட்டு.)

ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதன் வகையின் 2,278,000 பெறுமதியான அரச பணத்தை சட்டவிரோதமாக செலவு செய்து இருக்கின்றார்கள்.

கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் தனது மைத்துனர் உதய வீரதுங்க சகிதம் போலி நிறுவனம் (Bellimissa Holdings Limited) ஒன்றின் பெயரில் 10 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் மோசடி செய்து இருக்கின்றார்.

கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் தலைமையில் பெற்றோருக்கு நினைவு இல்லம் அமைப்பதற்காக 33 மில்லியன் பெறுமதியான அரச பொதுநிதி சட்டவிரோதமாக பயன்படுத்தி இருந்தார்கள்.

நாமல் ராஜபக்சே அவர்கள் தலைமை தாங்கிய இளைஞர்களுக்கான நாளை அமைப்பு அரசுக்கு சொந்தமான 172 மில்லியன் ரூபா பணத்தை களவாடி இருகின்றது.

அதே போல நாமல் ராஜபக்சே அவர்கள் அரச பொதுநிதிக்கு சொந்தமான 45 மில்லியன் ரூபா பணத்தை தனிப்பட்ட தேவைகளுக்காக சட்டவிரோதமாக மோசடி செய்து இருக்கின்றார்.

இது தவிர, நாமல் ராஜபக்சே 500,000 அமெரிக்கா டாலர்களை லஞ்சமாக பெற்று கொண்டு அரச நிதியை துஸ்பிரோயோகம் செய்து இருக்கின்றார்.

பாடசாலை மாணவராக இருந்த யோசித்த ராஜபக்சே அவர்களுக்கு சொந்தமான CSN தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பிக்க பயன்படுத்தப்பட்ட 365 மில்லியன் ரூபாய் பணம் எங்கிருந்து பெறப்பட்டது.?

என்பதற்கான எவ்விதமான கணக்குகளும் இல்லை  கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் தொடர்புடைய அவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரத்தில் 11.4 பில்லியன் அரச பொது நிதிக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றார்.

பசில் ராஜபக்சே அவர்கள் திவிநெகுமே அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 3000 மில்லியன் ரூபா பணத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் கையாடல் செய்து இருக்கின்றார்.

சட்டவிரோத பணபரிமாற்றத்தின் மூலம் இலங்கையின் பல பகுதிகளில் 282 மில்லியன் ரூபா பெறுதியான சொத்துக்களை பசில் ராஜபக்சே அபகரித்து இருக்கின்றார் .

பசில் ராஜபக்சே அவர்களின் பொறுப்பின் கீழ் அப்பாவி பொதுமக்களுக்கு என உருவாக்கப்பட்ட அரச பொது வீடமைப்பு திட்டத்தில் செய்த மோசடி மட்டும் 70 மில்லியன் அரச பொது நிதிக்கு எவ்விதமான கணக்குகளும் இதுவரை இல்லை.

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் போன்று நூற்றுக்கணக்கான சம்பவங்களின் பொது அரச பொது நிதி கையாடல் செய்த ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு

நீதியின் முன் நிறுத்தப்படுவதுடன் அவர்களின் கையாடல்கள் மீள இலங்கை திறைசேரிக்கு மீள பெறப்பட்டால் புலம் பெயர்ந்தவர்களிடம் கையேந்த வேண்டி வராது.

இதை விசாரிக்க வேண்டும் குற்றவாளிகளை அதிகாரத்தில் உட்காகார வைத்து கொண்டு அரச இயந்திர கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் வெளிநாடுகளில் கையேந்துவதால் எந்த பயனும் கிடையாது.

இதையும் படிங்க.!