chennireporters.com

பூந்தமல்லி பி.டி.ஒ.அலுவலகத்தை தனியாருக்கு குத்தகை விட்டாரா கலெக்டர்.???

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறையால் கோப்புகள் தேக்கம் அடைந்துள்ளன அதனை சரிசெய்யும் விதமாக பணி செய்ய தனியாருக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்தகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணி

இது குறித்து நாம் சம்பந்தப்பட்ட பி.டி.ஒ அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினோம் பூந்தமல்லி பி.டி.ஒ அலுவலகத்தில் லேண்ட் அப்ரூவல் பிரிவில் அரசு கோப்புகளை தனியார் லைசன்ஸ் சர்வேயர் பிரகாஷ் என்பவர் சி.எம்.டி.ஏ அதிகாரியை போல் கையாளுகிறார்.

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை ஆய்வு செய்வதற்கும் மனுக்களை நிராகரிப்பதற்கும் இவருக்கு அதிகாரம் கொடுத்தது யாரென பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் இது இதுகுறித்து பிரகாஷ் மாவட்ட ஆட்சியர் தன்னை தினக்கூலி அடிப்படையில் மூன்றாண்டுகளுக்கு பணி செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என்று சொல்லுகிறார்.

பிளானிங் அலுவலர் பிரகாஷ்

சென்னைக்கு மிகவும் அருகாமையில் அமைந்துள்ள பூந்தமல்லி பகுதி தற்போது வளர்ச்சி அடைந்து வரும் மிக முக்கியமான பகுதி.பூந்தமல்லி ஒன்றியத்தில் நடுகுத்தகை, கண்ணபாளையம்,சோராஞ்சேரி உள்ளிட்ட 15 ஊராட்சிகளை உள்ளடக்கியது.

பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதம் ஒன்றிற்கு காலி மனை வரன்முறை கட்டிட அனுமதி பெற மற்றும் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்துபெறப்படுகின்றன பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை சி.எம்.டி.ஏ. பிளானர் மூலம் சரிபார்க்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அங்கீகாரம் வழங்கப்படும்.

ஆனால் இங்கு மாறாக பொதுமக்கள் மனுக்களை தனியார் லைசன்ஸ் சர்வேயராக பணியாற்றும் பிரகாஷ் என்பவர் சரிபார்த்து இந்த மனுக்களில் உரிய ஆவணங்கள் இல்லை எனவும் மேலும் லஞ்சம் தராத பல மனுக்களை நிராகரித்து விட்டு பின்னர் மனுதாரரை தனிப்பட்ட முறையில் அணுகி இந்த கட்டட அனுமதி வழங்க குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வழங்க வேண்டும் எனவும் அப்படி கொடுக்கும் பட்சத்தில் அந்த வேலையை முடித்து தருவதாக கூறி கல்லா கட்டி வருகிறார்.

அரசு அதிகாரிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பிரகாஷ் உட்கார்ந்து கொண்டு மனுக்களை சரிபார்ப்பது மனுக்களை நிராகரிப்பது என பல பணிகளை செய்து வருகிறார் பொதுமக்கள் கட்டிட அனுமதி வழங்கும் மனுக்களை லைசன்ஸ் சர்வேயர் மூலமே மனுக்களை தயார் செய்து அரசு அலுவலகத்தில் சமர்ப்பிப்பார்கள்.

அப்படி சமர்ப்பிக்கும் மனுக்களை அங்கு அரசு அதிகாரியை போல் செயலாற்றும் மற்றொரு தனியார் லைசென்ஸ் சர்வேயர் நிராகரிப்பது பொதுமக்களை மட்டுமில்லாமல் லைசன்ஸ் சர்வேயர் களையும் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது அரசு ஆவணங்கள் மற்றும் அரசு அதிகாரியின் அறையை பயன்படுத்த இவருக்கு அதிகாரம் வழங்கியது யார் என்ற கேள்வி எழுகிறது.

அதிக நேரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வலம் வரும் பிரகாஷ் பொதுமக்களிடம் தான் எல்லா வேலைகளையும் முடித்துத் தருவதாக பொது மக்கள் மத்தியில் ஒரு பெரிய அதிகாரி என்ற போலி பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் செய்து தரும் வேலைக்கு ஒரு பெரிய தொகையை லஞ்சமாக பெற்று அந்த பணியை முடித்துக் கொடுக்கிறார்.

இவர் வாங்கும் கமிஷனில் பி.டி.ஒ. பாலசுப்பிரமணியம் மற்றும் ஆபீஸில் உள்ள ஸ்கீம் பி.டி.ஒ மேனேஜர் என முக்கிய அதிகாரிகள் அனைவருக்கும் பங்கு பிரித்துக் கொடுப்பதாக சொல்கிறார் பிரகாஷ்.

பூந்தமல்லி பி.டி.ஒ அலுவலகத்தில் வரும் உபரி வருமானத்தில் மாதம் 20 சதவீதம் மாவட்ட ஆட்சியருக்கு அன்பளிப்பாக தருவதாக மற்ற அதிகாரிகளிடத்தில் பெருமையாகச் சொல்லிக் கொடுக்கிறாராம் பி.டி.ஒ பாலசுப்பிரமணியம் உண்மை என்ன என்பதை மாவட்ட ஆட்சியர் தான் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்கின்றனர் பூந்தமல்லி பகுதி பொதுமக்கள்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு லைசன்ஸ் சர்வேயர்கள் மற்றும் புரோக்கர்கள் எல்லா நேரங்களிலும் அரசு அலுவலங்களில் அமர்ந்து ஆவணங்களை சரிபார்ப்பதை தடுத்து, பொதுமக்களுக்கு அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க.!