Chennai Reporters

17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி

சென்னை போக்குவரத்து வடக்கு ஆணையராக இருந்த என்.குமார். ஐ.பி.எஸ் தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்.

எம்.ஆர். சிபிச்சக்கரவர்த்தி சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.யாக இருந்தவர்.தாம்பரம் மாநகர காவல்துறை துனை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.மூர்த்தி ஐ.பி.எஸ் சி பி சி டி சென்னை.

இவர் தற்போது தாம்பரம் காவல் தலைமையக நிர்வாகப் பிரிவு எஸ்.பி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.சுப்புலட்சுமி குற்றப்பிரிவு மதுவிலக்கு துணை ஆணையராக இருந்த இவர் தாம்பரம் மத்திய மத்திய குற்றப்பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜே.மகேஷ் அம்பத்தூர் துணை ஆணையராக இருந்த இவர் தற்போது ஆவடி மாநகரம் பிரிக்கப்பட்ட பிறகு ஆவடி மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.எம். அசோக் குமார் சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையராக இருந்த இவர் ஆவடி போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருமாள் அமலாக்கப்பிரிவுஎஸ்பியாக இருந்த இவர் தற்போது ஆவடி மத்திய குற்றப்பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜி.உமையால். ஐ.பி.எஸ் தமிழ்நாடு சிறப்பு காவல்படை நான்காம் அணி கோவை புதூர் கமாடெண்டாக இருந்த இவர் ஆவடி தலைமையக நிர்வாகப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.எஸ். மகேந்திரன்.ஐ.பி.எஸ். மதுரை அமலாக்க பிரிவு எஸ்.பி.யாக இருந்தவர்.
சென்னை மாநகர காவல் துறையில் அமலாக்க பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் எஸ். தீபாகணிகர்.ஐ.பி.எஸ் துணை ஆணையர் அண்ணாநகர் இவர் தற்போது தமிழ்நாடு சிறப்பு காவல்படை எட்டாவது பட்டாலியன் டெல்லி மாற்றப்பட்டுள்ளார் .

டி.செந்தில் குமார்.ஐ.பி.எஸ் தமிழ்நாடு காவல் சிறப்பு படை எட்டாம் பிரிவு எஸ்பி ஆக இருந்த இவர் கோவைப்புதூர் கமாண்டன்ட் நான்காவது பிரிவு பட்டாலியன் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பி.மகேந்திரன்.ஐ.பி.எஸ்.சென்னை நிர்வாகப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த இவர் அடையாறு சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் பிரதீப் வடக்கு சென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த இவர் சென்னை மவுண்ட் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.சிவபிரசாத் துணை ஆணையர் வண்ணாரப்பேட்டை யாக இருந்தவர்.

அண்ணாநகர் துனை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள.அருண் பாலகோபாலன் மத்திய குற்றப்பிரிவு எஸ்.பி.யாக இருந்தவர்.சைபர் க்ரைம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பி.பாலசுப்ரமணியன் மத்திய குற்றப்பிரிவு மூன்றாம் அணி எஸ்பி ஆக இருந்த இவர் துணை ஆணையர் நுண்ணறிவு பிரிவு சென்னை-2 நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆல்பர்ட் ஜான் ஏடிஎஸ்பி வேலூர் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்த இவர் சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!