தனியார் பள்ளியின் தாளாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மீண்டும் ஒரு கள்ளக்குறிச்சி. ? அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்.
சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிக்குலேசன் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தாளாளர் வினோத்ஜெயராமன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி இன்று காலை முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்..
போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகம் தாக்கியதாக தெரிகிறது இதனைத் தொடர்ந்து போராட்டத்தின் போது மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்து பாஜக நிர்வாகி ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்..
அப்போது மாணவர்களின் பெற்றோர் நடத்தி வரும் போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம், எங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என கூறி பாஜக நிர்வாகிகளை பெற்றோர்கள் வெளியேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது..
இதனிடையே போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவ மாணவிகளிடம் பட்டாபிராம் துனை காவல் ஆணையர் சதாசிவம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அது தவிற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆவடி வட்டாட்சியர் உள்ளிட்டோர் மாணவ மாணவிகளிடம் பிரச்சனை குறித்து விசாரித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் நம்மிடம் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை தனது அறைக்கு அழைத்து வினோத் கவுன்சிலிங் கொடுப்பதைப்போல மாணவிகளின் அழகையும் உடலமைப்பையும் வர்ணிப்பாராம். ஒரு சில மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து விடோத் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள்.
இந்த நிலையில் தற்போது பாலியல் சீண்டலில் ஈடுப்பட வினோத் ஜெயராமன் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்..
அதாவது போக்ஸோ சட்டம் 9(f) r/w 10,11,(1) r/w 12 நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் தலைமறைவாகி உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் அதன் பின்னர் பெற்றோர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்… மாணவர்களின் போராட்டத்தை முதல் கட்டத்திலேயே புரிந்து கொண்டு ஆவடி மாநகர போலீஸ் கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.