Chennai Reporters

ஓட்டல் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட சப் -இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் கமிஷனர் உத்தரவு.

சென்னை அம்பத்தூரில் நேற்று இரவு திறந்து வைத்திருந்த ஒரு தனியார் உணவகத்தை அடைக்க சொல்லி அம்பத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தசரதன் கடை ஊழியர்களிடமும் பின்பு தொலைபேசி மூலம் கடை உரிமையாளரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் தமிழக டிஜிபி திரு. சைலேந்திரபாபு அவர்களிடம் ட்விட்டர் மூலம் புகார் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இப்புகாரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி அவர்கள் ஆவடி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்கள்.

 

புகார் மீது விசாரணை மேற்கொண்டு அறிக்கை பெற்ற ஆவடி காவல் ஆணையர் திரு.சந்திப்ராய் ராத்தோட் அவர்கள் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவை குறிப்பிட்டு ஏற்கனவே டிஜிபி அலுவலகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் சுற்றறிக்கை ஒன்று அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!