chennireporters.com

சாதி வெறி பிடித்த மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நாக்பூரில் ஆர்ப்பாட்டம்.

சாதி வெறி பிடித்த மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நாக்பூரில் ஆர்ப்பாட்டம்.

டாக்டர் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய தினத்தை தம்ம பரிவர்த்தன தினமாக கொண்டாடப்படுகிறது.

66 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் இந்த விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. நாடு முழுவதும் இந்த விழாவை கொண்டாட மக்கள் நாக்பூர் செல்வது வழக்கம்.

அப்போது நாக்பூரில் உள்ள ஆம்தார் நிவாஸ் என்ற எம்எல்ஏ விடுதியில் தங்கி செல்வார்கள். அந்த ஆஸ்டலில் ஒரு பகுதியை விழாவிற்கு வருபவர்களுக்காக கட்டணம் பெற்றுக் கொண்டு ஒதுக்கப்படும். கட்டணம் குறைவில்லை என்றாலும் நிகழ்வு நடைபெறும் தீக்ஷா பூமிக்கு மிக அருகில் எம்எல்ஏ விடுதியில் தங்குவார்கள். அதற்காக 2மாதத்துக்கு முன்பே கோரிக்கை கடிதம் அனுப்புவார்கள்.

 

ஆனால் இந்த முறை தீக்ஷா பூமி நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு அறைகளும் ஒதுக்கப்படவில்லை. போராடி பெற்றவர்களின் தண்ணீர் தராமல் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஃப்ட் வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. வேண்டும் என்றே மாகாராஷ்ட்ரா அரசு சாதி வெறியுடன் நடந்து கொள்வதாக கூறி மாகாராஷ்ட்ரா மக்கள் “சாதி வெறி பிடித்த மகாராஷ்டிரா அரசு ஒழிக” என கோஷமிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்திலிருந்து நாக்பூர் சென்ற அம்பேத்கர், பௌத்த மார்க்கவாதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் இருந்தனர். அதனால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆனால் போராடிய மக்களுக்கு பலன் தான் கிடைக்கவில்லை. அடுத்த உண்டாவது இந்த பிரச்னை எழாமல் இருக்க வேண்டும் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பு…

இதையும் படிங்க.!