chennireporters.com

ஈரோடு கிழக்குதொகுதி அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்?

ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. ஆனால் அதிமுக தரப்பில் வேட்பாளர் யார்?என்கிற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி ஆளுங்கட்சி தரப்பிலும் இருந்துவந்தது.

இந்தமுறை ஆளுங்கட்சிக்கு சவால்விடும்வகையில் தொகுதியில் கெட்டபெயர் இல்லாத புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி எளிது என்று பேசப்பட்டு வந்தது. அதன்படி ஈரோடு முன்னாள் நகரசெயலாளரும் 2011ல் அம்மா அவர்களால் கிழக்குதொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பெரியார்நகர் மனோகரன் , மாணவரணி இணைச்செயலாளர் நந்தகோபால் இருவரில் ஒருவருக்குத் தான் வாய்ப்பு கிடைக்கும் என பேசப்பட்டு வந்தது.

ஆனால் 1.2.2023 இன்று கிழக்குதொகுதி வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை கேட்டதும் தேர்தல் அலுவலகத்தில் இருந்து தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். தொண்டர்கள்மத்தியில் செல்வாக்கு இல்லாத ,ஏற்கனவே மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்துள்ள தென்னரசை அழைத்துக்கொண்டு எப்படி வாக்குகேட்கமுடியும்? ஆளுங்கட்சியான திமுகவுக்கு எப்படி பதிலடி கொடுக்கமுடியும்?எனமுனுமுனுக்க தொடங்கிவிட்டனர்.

இந்த விவகாரம் தற்போது அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடியார் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது என்றும் அதிமுக விஐபி ஒருவர் பெரியார் நகர் மனோகரனை அழைத்துக்கொண்டு எடப்பாடியாரை சந்திக்க சென்றுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இதனையடுத்து இன்று மாலைக்குள் அதிமுக வேட்பாளர் மாற்றம் இருக்கும் என்று அதிமுக தொண்டர்கள் அடித்துசொல்கின்றனர்.

அப்படி மாற்றம் நடந்தால் மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மாற்றம் முன்னேற்றம் என்கிற வகையில் ஈரோடு கிழக்குதொகுதியில்அதிமுகவெற்றிபாதையில் செல்லும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.தொண்டர்களின் எதிர்பார்ப்பை எடப்பாடியார் நிறைவேற்றுமா?

இதையும் படிங்க.!