chennireporters.com

பாஜக பெண் நிர்வாகியை அறுத்து மெரினா பீச்சில் வீசுவேன். சூர்யா சிவா மிரட்டல்.

பா.ஜ.க பெண் நிர்வாகி டெய்சி- சூர்யா சிவா மோதல் ஏன்? ஆடியோ டேப் பின்னணி
தமிழக பா.ஜ.க.,வுக்கும், பாலியல் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத கட்சியாக பாஜக இருந்து வருகிறது என்பதற்கு இந்த ஆடியோ எடுத்துக்காட்டாக  விளங்குகிறது. 

அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளும் ராகவன் பாலியல் சர்ச்சையில் சிக்கி பதவியை இழந்தார். அடுத்து சசிகலா புஷ்பாவுக்கு கூட்டத்திற்கு மத்தியில் அவரது கையை தொடுவது, இடுப்பை கிள்ளுவது போன்ற பாலியல் சர்ச்சைகள் தொடர்ந்தன.

இந்த நிலையில்தான், பா.ஜ.க.,வில் பதவி வழங்குவது தொடர்பாக சூர்யா சிவாவிற்கும் சிறுபான்மையினர் அணி தலைவரான டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்  கொலை செய்து விடுவேன் என்று மிரட்டும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது.

சூர்யா சிவாவுக்கும், பெண் நிர்வாகி டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் நிர்வாகியை ஆபாச வார்த்தைகளால் திட்டி  கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, தனது தந்தை மற்றும் தி.மு.க மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தி.மு.க.,வில் இருந்து விலகி பா.ஜ.க.,வில் இணைந்தார். இதனையடுத்து தி.மு.க நிர்வாகிகளை தொடர்ந்து விமர்சித்து பல்வேறு கருத்துகளை சூர்யா தெரிவித்தார். இதன் காரணமாக அண்ணாமலையிடம் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார்.

இந்தநிலையில் பா.ஜ.க.,வில் பதவி வழங்குவது தொடர்பாக சூர்யா சிவாவிற்கும் சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பா.ஜ.க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெய்சி சரண்  கடந்த ஆண்டு பா.ஜ.க.,வில் இணைந்த அவருக்கு சிறுபான்மையினர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல திருச்சி சிவாவிற்கு ஓ.பி.சி அணியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பா.ஜ.க சிறுபான்மையினர் அணியில் மற்றவர்களுக்கு பதவி வழங்குவதில் இரண்டு பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பான ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் திருச்சி சிவா மற்றும் டெய்சி சரண் என இருவரும் மாறி, மாறி சண்டை போட்டுக்கொள்கின்றனர். மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளால் டெய்சியை சூர்யா திட்டியும் உள்ளார். மேலும் பா.ஜ.க.,வில் நீங்கள் கேசவ விநாயகத்திடம் சென்று பதவி வாங்கினாய் என்று பேசியுள்ளார்.

அதை தவிற கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். லாரியில் அடிபட்டு இறந்துவிடுவாய் . அநாதையாக சாலையில் கிடப்பாய் எனவும் கூறியுள்ளார். உனது சாவுக்கு நான் தான் பொறுப்பு என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல், அண்ணாமலையிடம் சொல், அமித் ஷா, மோடியிடம் சொல் என  கோபம் கொப்பளிக்க பேசியுள்ளார். சென்னையில் மருத்துவமனை நடத்த முடியாது, உனக்கு வாழ முடியாத நிலையை உருவாக்குவேன் என எச்சரித்துள்ளார்.

பா.ஜ.க.,வில் பெண் தலைவருக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை நேரத்தில் பெண் தலைவருக்கே இந்த நிலையா என மற்ற கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ‘தான்தோன்றி’ தனமாக பேசக்கூடாது. செய்தி தொடர்பாளர்களை தவிர யாரும் ‘நேர்காணல்’ கொடுக்கக்கூடாது என கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அண்ணாமலை.

பா.ஜ.க.,வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தொடர்பாக பா.ஜ.க நிர்வாகிகள் யூடியூப் சேனலில் விமர்சித்து வருவதாக கடந்த சில நாட்களாக புகார் எழுந்தது. இதனையடுத்து கட்சி நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நமது கட்சியின் கருத்துக்களை, சித்தாந்தங்களைப் பதிவிடுவதற்கும், எதிர்க்கட்சிகளின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கும் சமூக வலைத்தளங்கள் பெரிதளவு பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாகத் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களுக்கு இணையாக யூடியூப் செயலியில் எண்ணற்ற சேனல்கள் இயங்கி வருகிறது.

நமது கருத்துக்களை முன்னெடுத்து வைப்பதற்கு யூடியூப் சேனல்களும் பெரிதளவில் உதவுகிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இவ்வாறு யூடியூப் சேனல்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நேர்காணல் வழங்கி வரும் சிலர் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து தங்களது சொந்த கருத்துக்களை முன்னிறுத்தி வருகிறார்கள்.

கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்கள் வழங்க விருப்பப்பட்டால் அதை நமது மாநில ஊடக பிரிவின் தலைவர் ரங்கநாயக்கலு அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

இனி வரும் காலங்களில், கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நீங்கள் நேர்காணல்கள் வழங்க வேண்டும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக நமது கட்சி சொந்தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணை ஆபாச பேசி கொலை மிரட்டல் விடுத்த சூர்யா சிவாவை கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

சூர்யா சிவா பற்றி கடுமையாக வலைதளங்களில் விமர்சித்த, தமிழ்நாடு பா.ஜ.க கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

அடிக்கடி எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவது அண்ணாமலைதான்  தற்போது மற்ற பொறுப்பாளர்களும் சர்ச்சையில் சிக்குவது பாஜகவிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!