chennireporters.com

உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழ்! முட்டுக்கட்டை ஐயா பழ.நெடுமாறன் கண்டனம்.

உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழ்!
முட்டுக்கட்டையாக இந்திய அரசின் கொள்கை

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

“இந்தியாவெங்கும் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் அந்தந்த மாநில மொழிகளிலே நடைபெறவேண்டும்” என தலைமையமைச்சர் மோடி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அவரின் இந்த விருப்பத்திற்கு மாறாக இந்திய அரசின் போக்கு அமைந்திருக்கிறது. மாநில உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் நியமிக்கப்படவேண்டும், அந்த உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற திட்டம் இப்போதும் நடைமுறையில் உள்ளது.

அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் அந்த மாநிலத்தின் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே தலைமை நீதிபதியாகவும் மற்றுமுள்ள நீதிபதிகளாகவும் இருக்கவேண்டும் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டால்தான் மாநில மொழிகள் உயர்நீதிமன்றம் வரை நீதிமொழியாக விளங்க முடியும்.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் மாவட்ட நீதிமன்றம் வரை தமிழ் நீதிமொழியாகத் திகழ்ந்து வருகிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழ் நீதிமொழியாக வர முடியாமல் இருப்பதற்கு இந்திய அரசின் மேற்கண்ட கொள்கையே காரணமாகும்.

எனவே அந்த கொள்கையை அறவே கைவிட்டால்தான் மாநில மொழிகள் உயர்நீதிமன்ற மொழிகளாக ஆக முடியும். அதற்கான நடவடிக்கைகளை தலைமையமைச்சர் மோடி மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!