ஆப்பிளை விட 40 மடங்கு சத்துக்கள் அதிகம்… இந்த கீரையை சாப்பிடுங்க; டாக்டர் கௌதமன். கற்பூரவல்லியை தினசரி சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் 10 பயன்களை பார்க்கலாம். சளி, இருமல் மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் மற்ற சில பிரச்சனைகளை குணப்படுத்தும் இந்த கற்பூரவல்லியை வீட்டில் வளர்ப்பது நன்மை பயக்கும்.
இருமல், சளிக்கு மட்டுமில்லாமல் கற்பூரவள்ளிக்கு மற்றும் சில பயன்களும் உள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.
வளர்சிதை மாற்றத்தை சரி செய்ய உதவும்: ஆப்பிளை விட 10 மடங்கு அதிகமான ஆண்டிஆக்ஸிடெண்ட் கற்பூரவல்லியில் உள்ளது. தினசரி 4 கற்பூரவல்லி இலையை சாப்பிடுவது ஆப்பிள் சாப்பிடுவதற்கு சமமாகும். தினசரி ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலனை தினமும் 4 கற்பூரவல்லி இலையை மென்று சாப்பிட்டாலே போதும் உடலில் நல்ல மாற்றத்தை காணலாம்.
வறட்டு இருமல்: 4 கற்பூரவல்லி இலைகளை எடுத்து தீயில் லேசாக வாட்டி சாறு பிளிந்து தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வர வறட்டு இருமல் நீங்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்க வேண்டாம்.
சோம்பேறித்தனம்: காலையில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இந்த கற்பூரவல்லி உதவும். இதை மென்றும் சாப்பிடலாம், சாறு எடுத்தும் சாப்பிடலாம்.
வயிறு உப்பசம்: காலை உணவு முடிந்த பிறகு ஒரு சிட்டிகை ஓமம், சீரகம் கலந்து சாப்பிட்டால் ஜீரனமின்மை, பசி, வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.
பித்தப்பைக்கல் : கற்பூரவல்லி சூரம், முசுமுசுக்கை, சுக்கு மூன்றையும் கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர பித்தப்பை கல் நீங்கும்.
சிறுநீரகக் கல்: காலை வெறும் வயிற்றில் கற்பூரவல்லியை முன்று எச்சிலுடன் சேர்த்து முழுங்கும்போது சிறுநீரக கல் பிரச்சனை நீங்கும். மேலும் மலச்சிக்கலை போக்கும்.
வாய்வுத் தொல்லை: இரவு படுக்கும்போது கற்பூரவல்லி இலையை மென்று சாப்பிட்டு சுடுதண்ணீர் குடித்தால் வாய்வுத் தொல்லை இருக்காது.
மாதவிடாய் கோளாறு: மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வலியை போக்க காலை மாலை 6 மணிக்கு கற்பூரவல்லி இலையை மென்று சாப்பிட்டு வர வலி நீங்கும்.
தொப்பை குறைவு: உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும். காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் கற்பூரவல்லி இலையை சாப்பிட்டு வர தொப்பை குறையும்.
எதிர்மறை சக்தி: வீட்டு வாசலில் கற்பூரவல்லியை நட்டு வைத்தால் நம் வாழ்வின் எதிர்மறை சக்திகள் நீங்கும்.