chennireporters.com

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான ரெய்டு நடக்கும் இடங்களின் பட்டியல் விவரம்.

ஏலகிரியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ்

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் அவருக்கு நெருக்கமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர் மீது 76 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளார்.

என்றும் அதற்கான ஆதாரத்தை அறப்போர் இயக்கத்தினர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில் சோதனை நடை பெற்று வருகிறது.

ஏலகிரியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ்

முதல்கட்டமாக 15 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்த இடங்கள் வருமாறு…

*ஏலகிரியில் உள்ள ஹோட்டல் ஹில்ஸ்.

*ஜோலார்பேட்டை காந்தி நகரில் அமைந்துள்ள வீடு.

*பழைய ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி சாலையில் உள்ள அவரது தம்பி காமராஜ் வீடு.

*வீரமணியின் அண்ணன் அழகிரி வீடு.

*அவரது குடும்ப உறவினர்களின் வீடு.

*திருப்பத்தூரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ் வீடு.

*தமலேரி முத்தூர் பகுதியிலுள்ள ஒன்றிய செயலாளர் வீடு.

*ஏலகிரி கிராமத்தில் அமைந்துள்ள அதிமுக மகளிரணி தலைவி சாந்தி வீடு.

*ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி சாலையில் உள்ள திருமண மண்டபம்.

*நாட்றம்பள்ளி மல்லகுண்ட பகுதியை சேர்ந்த மாவட்ட பொருளாளர் ராஜா வீடு.

*நாட்றம்பள்ளி பகுதியிலுள்ள ஒன்றிய செயலாளர் காமராஜ் வீடு.

*நாட்றம்பள்ளி கத்தாரி பகுதியை சேர்ந்த குட்லக் ரமேஷ் வீடு.
*ஜோலார்பேட்டையில் உள்ள நகர செயலாளர் சீனிவாசன் வீடு.

*கே.சி. வீரமணிக்கு சொந்தமான கே.சி கல்லூரி ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சோதனை முடிந்த பிறகு தான் எவ்வளவு மதிப்புள்ள சொத்துக்கள் ஆவணங்கள், பணங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிய வரும் என்கின்றனர்.

சோதனையில் ஈடுபட்டுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

இதையும் படிங்க.!