#breaking news. # big story.
#tamil nadu govt news 2026. #tvk party news. #breaking news. # venkataramanan mylapore tvk mla .
தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது என்கிறார்கள் திமுகவினர். காரணம் தமிழக அமைச்சரவையில் மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ வெங்கட்ரமனனுக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் இப்போதே போராட்டம் நடத்த தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.
மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெங்கடரமணன்.
போர்கொடி;
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த இடதுசாரிகள் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்தக் கூட்டணியில் இருந்து ஸ்டாலின் சம்மதத்துடன் வெளியேறி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று ( 2026 மே 10ம்தேதி) நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழக முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார் அவருடன் ஒன்பது நபர்களும் அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர்.
விஜக்கு புதிய நெருக்கடி ;
இந்த நிலையில் மயிலாப்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம் எல் ஏ வெங்கட்ராமனனுக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தமிழக வெற்றி கழக முக்கிய நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.இவர் தமிழக கல்வித்துறை அமைச்சர் ஆனால் திராவிட சித்தாந்தத்திற்கு எதிராகவும் பாஜகவின் கை பாவையாகவும் செயல்பட்டு எதிர்கால தமிழக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கு எதிராக செயல்படுவார் எனவே அவருக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கக் கூடாது என்று சில சமூக செயற்பாட்டாளர்களும் மூத்த பத்திரிகையாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய இடதுசாரி கட்சிகளின் முக்கிய தலைவர் ஒருவர் நாம் வெளியில் இருந்து தான் ஆதரவு அளித்து வருகிறோம். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாம் போராடி வருகிறோம் .மேலும் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு விரைவில் பின்பற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நாம் புதிதாக பதவி ஏற்றிருக்கிற கட்சி தலைவருக்கு இது போன்ற கோரிக்கைகளை வைக்க முடியாது .அப்படி வைக்க சொல்ல நமக்கு அதிகாரமும் இல்லை அது அரசியல் நாகரீகமாகவும் இருக்காது என்றார்.
தவெக தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, மற்றும் செங்கோட்டையன்.
எனவே தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, மற்றும் செங்கோட்டையன் மற்றும் சமூக நோக்கம் கொண்ட எழும்பூர் தொகுதி எம்எல்ஏ ராஜ்மோகன் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சர் விஜய்யிடம் எடுத்து சொல்லி தமிழக கல்வித்துறை அமைச்சர் பதவிக்கு வேறொருவருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழக இளைஞர்களும் மற்றும் தமிழக மாணவர்களும்.
எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜ்மோகன்.
தமிழக அரசியல் களத்தில் தவெக அமைச்சரவையில் முதல் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இந்த பிரச்சனையில் தலையிட்டு ஒரு சுமூக முடிவெடுக்கவேண்டும் என்கின்றனர் சில அரசியல் முன்னோடிகள்.
