chennireporters.com

நந்தினி-நிரஞ்சனா கைது..

இன்று டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி மதுரை தல்லாகுளத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவிட்டு..

“மக்களை கொள்ளையடித்து அதானி-அம்பானியை வளர்க்கும் மோடி பதவி விலக கோரி மக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கும் இயக்கத்தை” நந்தினி-நிரஞ்சனா இருவரும் தொடங்கினர்.

Dr.அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக அங்கு வந்த மக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர். இதற்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.

இந்நிலையில் நந்தினி-நிரஞ்சனா இருவரையும் திமுக அரசின் காவல்துறை கைது செய்து தல்லாகுளம் காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளது.

பாசிச RSS-பாஜக பிடியில் சிக்கியுள்ள திமுக அரசு மோடிக்கு எதிராக துண்டுப்பிரசுரம் கொடுத்தால் தொடர்ந்து காவல்துறை அடக்குமுறையை ஏவுகிறது.

தமிழ்நாட்டில் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக துண்டுப்பிரசுரம் மூலம் மக்களிடம் கருத்து பிரச்சாரம் செய்யக் கூட உரிமையில்லையா?

பெட்ரோல், டீசல், கேஸ், சமையல் எண்ணெய், மருந்து பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கடுமையாக விலை ஏறினாலும் அதற்கு எதிராக மக்கள் எதுவும் பேசக்கூடாதா?

மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் திமுக அரசுக்கு ஏன் கோபம் வருகிறது உடனடியாக நந்தினி-நிரஞ்சனா இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

-ஆனந்தன், குணா

இதையும் படிங்க.!