chennireporters.com

#Police taking bribes; புகார் கொடுத்தால் ”நோ”ஆக்சன்; விபச்சார புரோக்கர்களிடம் லஞ்சம் வாங்கி மௌனம் காக்கும் கோவை மாநகர போலீஸ்.

#சிறப்பு செய்தி

கோவை மாநகர காவல் துறையில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் ஒரு வருடம் இரண்டு வருடம் என வருட கணக்கில் புகார் கொடுத்தவர்களின் புகாரை விசாரிக்காமல் கிடப்பில் போட்டு பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் யார் எந்தெந்த காவல் நிலையங்களில் என்ன புகார் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.கோவை மாவட்டத்தில் நிழல் உலக தாதாவாக செயல்படும் ஸ்பா விபச்சார புரோக்கர்கள் நடத்தும் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஸ்பா சென்டர்களில் விபச்சார பிசினஸ் கொடி கட்டி பறந்து வருகிறது. இதை தடுக்காமல் விபச்சார புரோக்கர் மாமாக்களின் காலில்  தங்களது காக்கி சட்டையை கழற்றி வைத்து விட்டு  கல்லா கட்டி வருகிறார்கள்.

இந்த விபச்சார மையங்களில் நிழல் உலக தாதாவாக செயல்படும் சில போலி பத்திரிகையாளர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து தன்னை காப்பாற்றிக் கொள்கிறார்கள். குறிப்பாக சபல புத்தி உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் ஆசைக்கு இணங்கும் படி சில அழகிகளை அவர்களுக்கு சப்ளை செய்கிறார்கள் அது தவிர அவர்களுக்கு google pay-வின் மூலம் பணமும் வழங்கி வருகிறார்கள்.லஞ்சம் வாங்குவதில் டாக்டர் பட்டம் வாங்கிய இன்ஸ்பெக்டர் ராஜேஷ்

அதனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விபச்சார புரோக்கர்களுக்கு போலீசார் ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு மறைமுகமாக கொலை மிரட்டல் விடுவதும் அவர்களின் அலுவலகங்கள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு சென்று நோட்டமிட்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.மகன்களால் ஏமாற்றப்பட்ட அம்மாசைய்யப்பன்.

கோவை மாநகரம் இராமநாதபுரம் காவல் நிலையத்தில் பிரபாகரன் என்பவர் தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய போலி பத்திரிகையாளர் நந்தகுமார் மீது கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பே புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிரபாகரன்.

அதேபோல கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் கில்மோர் என்பவர் ஐந்து புகார்கள் கொடுத்துள்ளார். அதாவது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிராடு ரிப்போர்ட்டர் அருண்ஹென்ரிக்ஸ், சங்கிலி துரை என்கிற துரை, நந்தகுமார், ரகுநாதன் ஆகியோர் மீது அக்டோபர் மாதம் கொடுத்த புகாரில் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்தவே இல்லை.சங்கிலி துரை என்கிற துரை.

இது நாள் வரை ஒரே ஒரு முறை கூட புகார் கொடுத்த வரையோ அல்லது புகாரில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களையோ ஒரு முறை கூட காவல் நிலையம் அழைத்து விசாரிக்கவில்லை மேற்படி நபர்களால் கில்மோர் என்பவரின் குடும்பத்திற்கும் அவரின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து இருக்கிறது என்று மீண்டும் மாநகர காவல் ஆணையருக்கு ஒரு புகார் அளித்திருக்கிறார்.New Police Commissioner, DIG Coimbatore range assume office ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்.

கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் தேவதாஸ் என்பவர் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதாவது ஃபிராடு ரிப்போர்ட்டர் அருண் ஹென்ரிக்ஸ் என்பவர் தனது வீட்டிற்கே வந்து கொலை செய்து விடுவேன் என்று மரட்டி இஇருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது புகார் அளித்திருந்தார். அந்த புகார் ஒரு வருடம் ஆகியும் ஒரு முறை கூட சம்பந்தப்பட்ட நபரை போலீசார் இதுவரை அழைத்து விசாரிக்கவும் இல்லை. அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.காரணம் என்ன மாமுல்லான மாமுல்தான்.

அம்மாசையப்பனுக்காக வானதி சீனிவாசன் கொடுத்த கடிதம்.

கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சேகர் என்பவரின் மகன் மீது போலியாக போலீசார் கஞ்சா வழக்கு போட்ட சம்பவத்தில் அவரது அப்பா சேகர் இன்ஸ்பெக்டரை சந்தித்து நியாயம் கேட்டபோது அவரை மிரட்டியதில் சேகர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தின் வாசலிலேயே பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயத்தில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டூபாக்கூர் ரிப்போட்டர் நந்தகுமார்.

இராமநாதபுரம் காவல் நிலையத்தில் மூத்த குடிமக்களான அம்மாசைய்யப்பன்  என்பவர் தனது மகன்கள் தன்னுடைய சொத்துக்களை ஏமாற்றி விட்டதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக புலியகுளம் போலீஸ் நிலையத்தில் மேற்படி பெரியவர் அம்மாசைய்யப்பன் மீதே இரண்டு பொய் வழக்கை போட்டுவிட்டனர். தாய் தந்தையரின் சொத்துக்களை ஏமாற்றிய மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவர்களுக்கு ஆதரவாக பணம் வாங்கிக்கொண்டு தாய் தந்தையர் மீது வழக்கு பதிவு செய்த  மனதாபிமானம் இல்லாத ஈனப்பிறவிகள் தான்  புலியகுளம் போலீசார். தற்போது வீடும் இல்லாமல் நியாயமும் கிடைக்காமல் போராடி வருகின்றனர் அந்த பெரியவர்.

கடந்த ஆண்டு கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மூர்த்தி ஓட்டல் என்கிற திண்டுக்கல் பிரியாணி ஹோட்டலில் ரங்கநாதன் என்பவர் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தொண்டையில் சிக்கி இறந்து போனார்.

மூர்த்தி ஓட்டல்.             ரங்கநாதன்  பரோட்டா சாப்பிட்டு இறந்த நபர்.

ஆனால் அந்த விஷயத்தில் அவருக்கு ஹோட்டல் நிர்வாகம் எந்தவித முதலுதவி சிகிச்சையும் அளிக்காமல் 108 க்கும் தகவல் சொல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரங்கநாதனை அப்படியே கொண்டு போய் ரோட்டில் படுக்க வைத்து விட்டு தங்களது வியாபாரத்தை நடத்தி வந்தனர் ஹோட்டல் நிர்வாகத்தினர்.

அந்த விஷயத்தில் ஒரு மனித உயிரை கொல்வதற்கு காரணமாக இருந்த ஓட்டல் உரிமையாளர்கள் மீது இன்ஸ்பெக்டர் ராஜேஷ் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நல்ல பரோட்டாக்களையும்,  நல்லி எலும்பை தட்டி நக்கி, நக்கி, நல்லா சாப்பிட்டாராம்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் தேடித் தரும் எந்த வேலையும் செய்யாமல் லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருந்து தன் குடும்பத்திற்காக லஞ்சப் பணத்தை சேர்த்து சுகபோகமாய் வாழும் காவல்துறையின் உள்ள சில குள்ளநரிகள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்பதை மறந்து வேலை செய்கிறார்கள்.

ஃபிராடு ரிப்போட்டர் விபச்சார புரோக்கரிடம் லஞ்சம் வாங்கும் அருண்ஹென்ரிக்ஸ்.

பாதிக்கப்பட்ட மக்கள் நியாயம் கிடைக்காமல் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டால் தான் இவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி எழுப்புகின்றனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள். 

தேவதாஸ்

தமிழ்நாடு முழுவதும் அரசுக்கு எதிராகவும் அரசு துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் நபர்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது போல கோவையில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.

இதையும் படிங்க.!