பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இவற்றில் பல வார்டுகளில் ட்ரீட் கேட்ச் பிட் அதாவது சாலையின் ஓரத்தில் மழை நீர் வடிகால் கால்வாயின் அருகில் மழை நீர் செல்ல அமைக்கப்படும் கால்வாயிற்கு பெயர் (இந்த ஸ்ட்ரீட் கேட்ச் பிட்) இதை பல வார்டுகளில் பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள் அமைத்து வருகின்றனர்.



கடந்த 7 மாத காலமாக நடைபெற்று வரும் இந்த பணிகளில் 25 லட்சத்திற்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது எந்தவித அறிக்கையும் தயார் செய்யாமல் பூந்தமல்லி நகராட்சியில் ஒரு பொறியாளர் உதவி பொறியாளர் ஓவர்சீஸ் ஆகிய மூன்று அதிகாரிகளும் இருந்து கொண்டு எந்த திட்ட அறிக்கையும் தயாரிக்காமல் கால்வாய் ஓரம் ஒரு சிறிய பள்ளத்தை தோண்டி அதில் மொத்தமாக எட்டு செங்கல் புதைத்து அதற்கு மேல் ஒரு கம்பி வளையத்தை வைத்து விடுகிறார்கள். இதை கட்டுவதற்கு ஒன்றிற்கு 6500 செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.



ஆனால் ஒரு செங்கல்லின் விலை பத்து ரூபாய் 8 செங்கல் என்பது ரூபாய் கம்பி ஒரு 100 ரூபாய் கட்ட ஒரு கட்டு கூலி 200 ரூபாய் என்றால் 500 ரூபாய் கூட செலவு செய்யாமல் ஒரு கேட்ச் பிட்டு கட்டுவதற்கு ஆராய்ந்து ஐநூறு ரூபாய் செலவு செய்ததாக போலியாக கணக்கெழுதி அதிகாரிகள் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று நகராட்சி துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

கார்த்திகேயன் ஐஏஎஸ்
எந்தெந்த திட்டத்தில் எப்படி கொள்ளையடிக்கலாம் என்பதில் நகராட்சி அதிகாரிகள் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று கிண்டல் அடிக்கின்றனர் எதிர்க்கட்சியினர். எனவே இதில் நகராட்சி உயர் அதிகாரிகள் துறை செயலாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ் அவர்கள் தனி விசாரணை குழு அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

இதே ஸ்ட்ரீட் கேட்ச் பிட் செயலை மாங்காடு திருவேற்காடு போன்ற நகராட்சிகளிலும் அமைத்து அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து இருக்கின்றனர் புதிய தகவலை சொல்கின்றனர் எதிர்க்கட்சியினர். இந்த திட்டம் குறித்து பூந்தமல்லி நகராட்சி பொறியாளர் ஜெயகுமார் அவர்களை தொடர்பு கொண்டோம் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இந்த ஊழல் குறித்து அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்
பூவிருந்தவல்லி நகராட்சி உட்பட்ட கால்வாய்களின் ஓரம் (Street catch bit) மழைநீர் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு ஸ்ட்ரீட் கேஸ் பிட்டின் (Street catch bit) விலை 6500 ரூபாய்.

கிட்டத்தட்ட இத்திட்டத்தின் கீழ் 25 லட்சத்திற்கு மேல் ஊழல் செய்யப்பட்டுள்ளது .
பூந்தமல்லி நகராட்சி அப்போது இருந்த மகேஸ்வரி ஆணையர் மற்றும் தற்போது வரை உள்ள பொறியாளர் ஜெயக்குமார் உதவி பொறியாளர் சோபனா இவர்கள் மூன்று பேரும் உட்பட்டு தான் ஊழலை செய்துள்ளார்கள். இந்த திட்டம் மழை நீர் சாலையில் தேங்கி நிற்காமல் கால்வாயில் செல்வதற்காக தயார் செய்த பயப்பட்டது. ஆனால் தற்போது அந்த கால்வாய்கள் மண்ணில் புதைந்து கிடக்கிறது.

ஆனால் இத்திட்டம் ஒரு முழுமையான தோல்வி திட்டமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளார்கள். ஒப்பந்த நிறுவனம் மூலம் பல லட்ச ரூபாய் அதிகாரிகள் ஊழல் செய்துள்ளார்கள். இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் நகராட்சி முதன்மைச் செயலாளர் பல உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. என்கின்றனர் எதிர் கட்சியினர். இது குறித்து துறை அமைச்சர் நேரு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் எதிர்கட்சியினர்.
