காக்கி சட்டை போட்டுக் கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய சப்-இன்ஸ்பெக்டர் குற்ற செயல்களை தடுக்காமல் குற்றம் செய்பவர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பிடுங்கி அதிகாரிகளுக்கு பங்கு கொடுக்கிறேன் என்று ஆணவமாய் பேசும் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் பற்றி காவல்துறை இயக்குனருக்கும் வடக்கு மண்டல ஐஜிக்கும் புகார் அனுப்பி இருக்கிறார்கள் சக காவலர்கள் இந்த செய்தி தான் தற்போது திருவள்ளூர் மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பரமசிவம் B-1 புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே பெண்ணாலூர் பேட்டை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அது ஆந்திர மாநிலத்தை ஒட்டிய ஒரு காடு சார்ந்த பகுதி. அங்கு குடியும் குடித்தனமாய் சுகபோகமாய் வாழ்ந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்தை ஊத்துக்கோட்டை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த கணேஷ் குமார் இவரின் குடிபோதை பழக்கத்தை கண்டு கடுமையாக இவரை கண்டித்து அவரை மாற்ற வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார் அதன் அடிப்படையில் இவர் பணி மாற்றம் செய்யப்பட்டார்.
புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றதும் சினிமா படத்தில் வரும் வில்லனைப்போல வருமானம் வரும் வழி எது? யார் யார் திருட்டுத்தனமாக மணல் ஓட்டுகிறார்கள்.? சவுடு மண் திருடுகிறார்கள் கஞ்சா விற்பவர்கள் யார்? ஹான்ஸ் விற்கும் கடைகள் எது என தனிப்பிரிவு SB ஏட்டு விக்னேஷிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு தனது கல்லா கட்டும் வேலையை தொடங்கினார் பரமசிவம். தனக்காக லஞ்சப்பணத்தை வாங்கிக் கொடுக்கும் ஏஜெண்டாக புல்லரம்பாக்கம் கராமத்தை சேர்ந்த தீனா என்பவரை புரோக்கராக பரமசிவம் நியமித்துக் கொண்டார்.அதன் அடிப்படையில் கடந்த வருடம் மார்ச் மாதம் இங்கு பணிக்கு வந்த பரமசிவம் இதனால் வரை 40 லட்சங்களுக்கு மேல் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதாவது திருவள்ளூர் அடுத்த தங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரின் மகன் பொட்டு என்கிற இளைஞன் ஒட்டுமொத்த கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார். இவர் கஞ்சா வியாபாரம் செய்வதை தெரிந்து கொண்ட பரமசிவம் அவர் மீது சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூன்று லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு அவர் வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவையும் வாங்கி வைத்துக் கொண்ட பரமசிவம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டார். அவரிடம் வாங்கிய கஞ்சாவை சிறு வியாபாரிகளிடம் கொடுத்து விற்பனை செய்ய சொன்னார் பரமசிவம்.
அதே போல நேற்று 25/3 /2025 மதியம் சிறுவனூர் கண்டிகை பெட்ரோல் பங்க் அருகே உள்ள சாய்ராம் கூல்ட்ரிங்ஸ் பெட்டி கடையில் ஆன்ஸ் போதை புகையிலை விற்ற கடையின் விற்பனையாளரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற பரமசிவம் காவல் நலையத்தில் வைத்து ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் என்னால் அவ்வளவு பணம் தர முடியாது நான் ஜெயிலுக்கே போகிறேன் என்று சொன்னவுடன், சரி ஐம்பதாயிரம் ரூபாயாக அது கொடு என்று பேரம் பேசினார். அதுவும் முடியாது என்று மறுத்த வியாபாரியிடம் சரி 25 ஆயிரம் பணம் கொடுத்து விட்டுப் போ என்று 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர் மீது எந்தவித வழக்கும் போடாமல் வீட்டுக்கு அனுப்பினார் பரமசிவம்.
கடந்த 22 ஆம் தேதி புல்லரம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரில் ஒரு ட்ராக்டர் குடோனுக்கு அருகில் இரவு 9 மணி அளவில் எம்.ஜி. ஆர் நகரை சேர்ந்த அஜய், ஆதி, சரத், விக்னேஷ் போன்ற இளைஞர்கள் கூட்டாக உட்கார்ந்து கொண்டு கஞ்சா குடித்து வருகின்றனர். சாலையில் செல்லும் பொது மக்களை ஆபாசமாக பேசி வருகின்றனர் என்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த எஸ்ஐ பரமசிவம் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுக்கு தல 20 ஆயிரம் 25 ஆயிரம் என விலை பேசி லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒருவர் மீதும் வழக்கு போடாமல் வீட்டுக்கு அனுப்பினார்.இதேபோல அந்த பகுதியில் மணல் மற்றும் மண் திருடும் அனைவரிடமும் டிஎஸ்பிக்கு தர வேண்டும் எஸ்பி சீனிவாச பெருமாள் கேட்கிறார். நீ வாங்கிய லஞ்சம் எவ்வளவு என்று எனக்கு தெரிந்து விட்டது. எனக்கு பங்கு கொடு என்று எஸ்.பி கேட்டார் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் உயர் அதிகாரிகள் பெயரை தவறாக பயன்படுத்தி பல லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார்.
எஸ்ஐ பரமசிவம்
இது தொடர்பாக அந்த காவல் நிலையத்தில் உள்ள ஒட்டுமொத்த காவலர்களும் ஒரு சமூக ஆர்வலரிடம் சொல்லி ஐஜி மற்றும் காவல்துறை இயக்குனருக்கு புகார் அனுப்பியுள்ளனர். அந்த புகாரில் எஸ்ஐ பரமசிவம் வந்தவுடன் சினிமா படத்தில் வரும் பொறுக்கி போலீசை போல இந்த காவல் நிலையம் மாறிவிட்டது. சாதாரண வழக்கில் கூட ஒருவரை மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உடனடியாக அந்த நபரின் சட்டை லுங்கி கழற்றி அரை நிர்வாணமாக செல்லுக்குள் உட்கார வைத்து தனது ரேட்டிங்கை கூட்டுவது தான் பரமசிவத்தின் ஸ்டைல் என்கிறார்கள் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள்.
தான் வாங்கும் லஞ்சப் பணத்தில் ஒரு சிங்கிள் டீ கூட தன்னுடன் பணியாற்றும் எந்த காவலர்களுக்கும் வாங்கித் தராமல் லஞ்ச பணத்தை அனைத்தையும் சுருட்டி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சரக்கு வாங்க ஆள் அனுப்பி ரெஸ்ட் எடுக்க போய் விடுவார் பரமசிவம்.
அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் எல்லோரையும் ஒருமையிலும், அசிங்கமாகவும், மரியாதை குறைவாகவும், பேசுவது தான் பரமசிவத்தின் ஸ்டைல். இவர் மனசுக்குள் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற நினைப்பு. அந்த காவல் நிலையத்தில் உள்ள பல மூத்த தலைமை காவலர்களை பெயர் சொல்லி ஒருமையில் பேசுவது அதை கண்டித்து கொதித்து எழுந்த காவலர்கள் பரமசிவத்துக்கு எதிராக புகார் கொடுக்க துணிந்து விட்டனர். அதன் அடிப்படையிலேயே அவர் யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் வாங்கி உள்ளார் இவருக்கு ஏஜென்டாக தீனா என்பவர் எப்படி செயல்படுவார் அவர் எப்படி சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி இவருக்கு பணம் வாங்கி தருவார் என பல தகவல்களை நம்மிடம் சொன்னார்கள். பரமசிவம் காக்கிசட்டை அணிய தகுதியற்ற கறுப்பாடு அந்த கருப்பு ஆட்டை காவல்துறையிலிருந்து களை எடுத்து பிடுங்கி எறிய வேண்டும் என்கின்றனர் அவருடன் பணயாற்றும் காவலர்கள்.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்
புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் காவல்துறை தலைவர் மற்றும் திருவள்ளூர் எஸ்.பி. காவல்துறை உயர் அதிகாரிகள் நேர்மையின் சிகரமாக விளங்குகிற வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அவர்கள் பரமசிவத்தின் கடந்த மூன்று ஆண்டுகால வருமானம் எவ்வளவு என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதாவது அவர் வைத்திருக்கும் வங்கி கணக்குகள் அவர் மனைவி மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் வைத்துள்ள அனைத்து வங்கி கணக்குகளை ஆய்வு செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு பரிந்துரைத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்கின்றனர். சில நேர்மையான போலீஸ் அதிகாரிகள் அது மட்டுமல்ல பரமசிவம் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த பிறகுதான் கஞ்சா விற்பனை அதிகமாகி உள்ளது என்கின்றனர் கிராம பொதுமக்கள்.
கஞ்சா விற்பவர்கள் யார் என்ற விவரம் தெரிந்தும் கூட அவர்கள் மீது எந்தவித ஒரு வழக்கு கூட பதிவு செய்யாமல் அவர்களிடம் மாத மாதம் லஞ்சம் பெற்று வருகிறார் என்கின்றார்கள் கிராம பொதுமக்கள். எனவே வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா பார்க் அவர்கள் பரமசிவத்தின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்களை முடக்கி பறிமுதல் செய்ய வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். இது தொடர்பாக பரமசிவம் தனது தரப்பு விளக்கம் அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.