சேலம் வழக்குரைஞர் அரிபாபு அவர்களைப் பலரும் அறிவர்.
முழுமையாகத் தன் வாழ்நாளை அதிகாரங்களின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், பொது நலச் சேவைக்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்.
சேலம் அங்கம்மா காலனி மக்களை அவர்கள் பலகாலமாக வாழ்ந்து கொண்டிருந்த வீடுகளிலிருந்து வெளியேற்றும் முயற்சியை ஆக வலிமையான அரசியல் சக்திகள் முயன்றபோது தன் உயிரைப் பணயம் வைத்து அம்மக்களின் உரிமைகளை மீட்டுத்தந்தவர்.
வீரப்பனை அதிரடிப் படை பிடித்து வந்து சுட்டுக் கொன்ற போதும், சேலம் கதிர்வேலு, சென்னை வெள்ளை ரவி முதலானோர் போலி என்கவுண்டர்களில் கொல்லப்பட்டபோதும், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஆயுதங்கள் காணாமற் போனபோது அப்பாவிகள் மீது வழக்குகள் போடப்பட்டபோதும் உண்மை அறியும் குழுக்களை அமைத்து உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர்.
center for Protection of Civil Liberties (CPCL) அமைப்பில் கடந்த இருபது ஆண்டுகளாக இருந்து செயல்பட்டு காவல்துறை நடவடிக்கைகளுக்கும் இலக்கானவர்.
அவரது பணிகளில் மிகச் சில மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த இரண்டாண்டுகளாக கடும் இதய நோயால் பாதிக்கப்பட்டு தோழர்களின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் தோழர் அரிபாபு தற்போது உடனடி இதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது சிகிச்சைக்கு உடனடியாக பத்துலட்ச ரூபாய் (Rs 10 இலட்சம்) தேவைப்படுகிறது.
தோழர்களும், நண்பர்களும் அவருக்கு நிதி உதவி செய்து அவரைக் காப்பாற்ற அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
அவரது மனைவியின் வங்கிக் கணக்கு விவரம் கீழே:
P.S.Kavitha
Account No : 129401000011819
Indian Overseas Bank (IOB)
IFSC : IOBA0000655
Branch: Leigh Bazar, Salem.
இப்படிக்கு,
அ. மார்க்ஸ் (94441 20582), கோ. சுகுமாரன் (98940 54640),
பேரா பிரபா கல்விமணி (90472 22970), பேரா. சே. கோச்சடை (94438 83117)
போராட்டமே வாழ்க்கையாக கொண்ட ஒரு நல்ல மனிதர் அரிபாபு, உயிரோடும் இப்போது போராடுகிறார்.
வாய்ப்பு உள்ள தோழர்களே…நல்ல உள்ளங்களே.. உதவிக்கரம் நீட்டுங்கள். உங்களால் மனிதம் பூக்கட்டும் ! ஒரு போராளி உயிர் பெறட்டும் !!