chennireporters.com

#Sasikanth Senthil; தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர். தட்டி தூக்கிய சசிகாந்த் செந்தில்.

தமிழ்நாட்டில் முதல் நாடாளுமன்ற தொகுதியான திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் மொத்தம்  20,85,991 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,30,738 பேர் வாக்களித்தனர்.  காங்கிரஸ், தேமுதிக, பாஜக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ்  உள்பட ஏழு  சுயேச்சைகள் என மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர்.  மொத்தம் 36 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் முதல் சுற்றில் இருந்தே திமுக கூட்டணி வேட்பாளரான  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிகாந்த் செந்தில் முன்னிலை பெற்று வந்தார்.ஒவ்வொரு சுற்றிலும் அவரது வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் இருந்தது. அதே நேரத்தில் இரண்டாவது இடத்தை தே.மு.தி.க வேட்பாளர் நல்ல தம்பியும் பா.ஜ.க வேட்பாளர் பாலகணபதியும் மாறி மாறி இடம் பிடித்து வந்தனர். ஐந்தாவது சுற்றியின் முடிவில் சசிகாந்த் செந்திலுக்கும் மற்ற வேட்பாளர்களுக்குமான வாக்கு வித்தியாசம் ஒரு லட்சம் வாக்குகளை தாண்டியது. ஒரு கட்டத்தில் எட்டிப் பிடிக்காத  முடியாத நிலையில் சசிகாந்த் செந்தில் இருந்தார். வாக்கு எண்ணிக்கையின் இடையில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளும் சசிகாந்த் செந்தில் 2,000-க்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். மற்ற வேட்பாளர்கள் 800க்கும் குறைவான தபால் வாக்குகளையே பெற்றனர்.

கடைசியாக மூன்று நான்காவது சுற்றின் முடிவில் 7,96,956 வாக்குகளை பெற்ற சசிகாந்த் செந்தில் 5,72,155 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இந்த தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையையும் படைத்தார். காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில். மேலும் பாஜக வேட்பாளர் பாலகணபதி இரண்டாவது இடத்தையும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி மூன்றாவது இடத்தையும் சில நூறு வாக்கு வித்தியாசத்தில்  மட்டுமே இடம் பிடித்தனர். பதிவான வாக்குகளில் குறைந்தது ஆறில் ஒரு பங்கான 2,38,457 வாக்குகள் பெற்றால் மட்டுமே இந்த தொகுதியில் டெபாசிட் பெற முடியும் ஆனால் சசிகான் செந்திலை தவிர யாரும் இந்த வாக்குகளை பெற முடியவில்லை. அவரை தவிர பாஜக தேமுதிக உள்பட போட்டியிட்ட 13 வேட்பாளர்களுமே டெபாசிட் இருந்தனர். திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  சசிகாந்த் செந்தில் சமூக வலைதளங்களில் மூலமும் வார் ரூம்  மூலமும் தனது பிரச்சாரத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை சிறப்பாக தொடங்கி நடத்தி வந்தார்.அது தவிர தான் பிறந்து வளர்ந்த ஊரான பெருமாள்பட்டு கிராமம் அவரது சொந்த ஊர் என்பதால் அவரது உறவினர்கள், அவரது கட்சியைச் சார்ந்தவர்கள் கூட்டணியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சிகள் மிக வலுவாக சிறப்பாக பணியாற்றினார்கள். அது தவிர ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவும், முக்கிய பொறுப்பாளர்களும் கடுமையாக உழைத்தனர். இதன் காரணமாக தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் என்ற பெருமையை  தனது முதல் தேர்தல் மூலமே சாதித்து காட்டினார்.

அது தவிர நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் தனது தேர்தல் பிரச்சார யுக்திகளின் மூலம் காங்கிரஸ் கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றவர் சசிகாந்த் செந்தில் என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை.

இதையும் படிங்க.!