chennireporters.com

#Singer Jayachandran; பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்.

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு” பாடல் புகழ்.. பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்! ரசிகர்கள் அதிர்ச்சி. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 15000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 15000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகர் ஜெயச்சந்திரன். Renowned Malayalam playback singer P Jayachandran dies at 8080 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பலே வேலை செய்த சிறுத்தை சிவா!” இதற்காக அவர் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பின்னணி பாடகர்களில் ஒருவரான ஜெயச்சந்திரன், தனது மென்மையான குரலால் இசை ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர். 1967 ஆம் ஆண்டு, பி. வேணுவின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஜெயச்சந்திரன், பின்னர் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல அழகான பாடல்களைப் பாடியுள்ளார். P. Jayachandran - Wikipedia1972 ஆம் ஆண்டில், ‘பணிதீராத்த வீடு’ படத்திற்காக கேரள அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதைப் பெற்று தனது திறமையை நிரூபித்தார். இளையராஜா இசையில் பாடிய ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது’ போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். Legendary Malayalam Singer P Jayachandran Dies At 80 | Times Nowகுறிப்பாக, ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் இவர் பாடிய ‘கத்தாழம் காட்டுவழி’ பாடல் மிகவும் பிரபலமானது. இதற்கு முன்பே, ரகுமானின் தந்தை ஆர்.கே. சேகர் இசையமைத்த ‘பெண்படா’ படத்திலும் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார்.  விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ படத்தின் ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடல் உட்பட ‘சின்ன பூவே மெல்ல பேசு’, ‘கடவுள் வாழும் கோவிலிலே’, ‘வண்டி மாடு எட்டு வச்சி’, ‘இது காதலின் சங்கீதம்’, ‘காளிதாசன் கண்ணதாசன்’, ‘கொடியிலே மல்லிகைப்பூ’, ‘அந்திநேர தென்றல் காற்று’ போன்ற பல பாடல்கள் இன்றும் தமிழ் சினிமாவின் மிகப்பிரபலமான பாடல்களாகும். Who Was P. Jayachandran? The Iconic Playback Singer Who Passed Away At 80 News24 -ஜெயச்சந்திரனின் மென்மையான குரல் மற்றும் அழகான பாடல்கள் இன்றும் பலரின் இதயத்தை கொள்ளை கொண்டு வருகின்றன. அவரது பாடல்கள் கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் பரவலாக கேட்கப்படுகின்றன. தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது.

இதையும் படிங்க.!