chennireporters.com

யாதார்த்தத்தின் நாயகன் நடிகர் பூ ராமு காலமானார்.

நடிகர் பூ ராமு (60) மாரடைப்பு காரனமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நடிகர் பூ ராமு.

காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் பூ ராமு.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன் பங்களிப்பை வழங்கி வந்தவர்.

சென்னை கலை நாடக குழுவில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் பூ ராமு.

கடந்த 2008 – ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான “பூ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு.

இதற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் பூ ராமு நடித்திருந்தாலும் பூ படமே அவரை ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது.

இதன் காரணமாகத்தான் இவர் தனது பெயருக்கு முன்னாள் பூ ராமு என்று சேர்த்துக் கொண்டார்.

அதன் பிறகு தங்கமீன்கள், நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை, கர்ணன், சூரரை போற்று உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

இவர் நடித்த பூ, தங்கமீன்கள், நீர்ப்பறவை, பேரன்பு, பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை போன்ற படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட படங்களாகவும் சர்வதேச விருதுகளை வென்ற படங்களாகவும் இருக்கிறது.

செவ்வாய்க்கிழமை ஊரப்பாக்கம் மயானத்தில் தகனம் நடை பெற்றது.

தனது எதார்த்த நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் இதயத்தில் கதாநாயகனாக வாழ்ந்து வருகிறார் பூ ராமு.

இதையும் படிங்க.!