chennireporters.com

மாநகராட்சி அருகில் உள்ள பெரிய மேடு பகுதியில் கழிவறைகளை சரி செய்து தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்து தர வேண்டும் என்று முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரியமேடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் அனைவரும் பூர்வீக குடிமக்கள் ஆவார்கள்.  குறிப்பாக நேவல் ஆஸ்பிட்டல் ரோட்டில் கடந்த 20 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் தனியார் பொதுக்கழிப்பிடம் தற்போது மிகவும் மோசமடைந்து உள்ளது.

இந்த கழிப்பிடம் தற்போது மிகவும் நோய் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உள்ளது பலமுறை அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும்  எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத பொது மக்கள் இதையே பயன்படுத்துகிறார்கள்
தனியாரிடம் இருந்தபோது ஒரு ரூபாய் முதல் 50 காசு வரை வாங்கிக் கொண்டிருந்தனர். தற்போது இந்த கழிப்பிடங்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

தற்போது யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது.

அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி அருகிலேயே இருக்கக்கூடிய இந்த பகுதியை யாரும் கண்டு கொள்வதில்லை இதே நிலை தொடர்ந்தால் டெங்கு மற்றும் காலரா போன்ற  தொற்று நோய்கள் பரவும்  நிலை ஏற்படும்.

உழைக்கும் இந்த மக்கள் வீடில்லாமல் சாலையிலேயே படுத்து உறங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.  அவர்களின் இயற்கை ஊபாதைகளுக்கு கூட அரசு சரியான கழிப்பறைகளை செய்து தராமல் இருப்பது வருந்தத்தக்க செய்தி . எனவே சென்னை மேயர் பிரியா உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு பெரிய மேடு பகுதி மக்களுக்கு உடனடியாக தரமான கழிப்பறைகளை செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க.!