chennireporters.com

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பாலியல் புகாரில் கைது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.   மாணவி கொடுத்த புகாரின் மீது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.   இந்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக கோபி என்பவர் பணியாற்றி வருகிறார்.   இவர் பல்கலைக்கழக முழுநேர பொறுப்பாளராக கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகிறார்.

மேலும் மூன்று மாணவிகளுக்கு ஆராய்ச்சி வழிகாட்டியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வறிக்கையை சரிபார்ப்பதற்காக மாணவியை நேரில் வர அறிவுறுத்தியுள்ளார்.  நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது இல்லத்தில் அவர் மாணவியை வரவைத்ததாக கூறப்படுகிறது.

அவர் அறிவுறுத்தலின் பேரில் அந்த மாணவி மாலை 5 மணிக்கு தனது உறவினர் ஒருவருடன் பதிவாளர் இல்லத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.  அப்போது மாணவியுடன் சென்ற உறவினர் வெளியே டீ குடிக்க சென்றதாகவும் அப்போது மாணவி தனியாக இருந்ததை பதிவாளர் கோபி தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பதிவாளரின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து வெளியேறி உள்ளே நடந்த விவரத்தை தனது உறவினரிடம் கூறி கருப்பூர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார்.

தனது புகாரில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று அவர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கோபியை கைது செய்தனர்.

பதிவாளர் கோபி மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் புகார்கள் நிலுவையில் உள்ளது இவர் மீது 2016ஆம் ஆண்டு ஆராய்ச்சி மாணவிகள் பேராசிரியர் கோபி தவறாக நடக்க முயன்றதாக அப்போதைய துணை வேந்தர் சாமிநாதனிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டதாகவும் குழு விசாரணை நடத்தி துணைவேந்தர் இடம் விசாரணை அறிக்கை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.   மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கோபி வசமாக சிக்கி சிறைக்குப் போய் இருக்கிறார் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள்.

இதையும் படிங்க.!