Chennai Reporters

அதிகாரம் இல்லாத நீ எனக்கு எழுதிய கடிதம் செல்லாது ஓபிஎஸ் கடிதத்திற்கு எடப்பாடி பதிலடி.

அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து விட்டு தற்போது ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்று எடப்பாடிபழனிசாமி பன்னீர்செல்வத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த கடிதம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  நடக்கவிருக்கும் உள்ளாட்சி  மன்ற இடை தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு ஓ பன்னீர்செல்வம்  எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த நிலையில் அந்தக் கடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடிபழனிசாமி பதில் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர் செல்வத்திற்கு எழுதிய கடிதத்தில் அன்புள்ள அண்ணனுக்கு வணக்கம் என்று தொடங்கி தங்களின் 29.06.2022 ம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாக தெரிந்து கொண்டேன்.  பின்னர் மகாலிங்கம் வழியாக கடிதத்தைப் பெற்றுக் கொண்டேன்.

கடந்த ஜூன் 23ஆம் அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்டத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை.  அதனால் அந்த சட்ட  திருத்தங்கள் காலாவதியாகிவிட்டது.

எனவே கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.  மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் கடந்த ஜூன் 27-ஆம் தேதி அன்று முடிவுற்ற நிலையில் ,

இத்தனை நாட்கள் பொறுத்திருந்து கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்காத  நிலையிலும் ஜூன் 27ஆம் தேதியன்று கூட்டப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவரும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு மொத்தம் உள்ள 74 தலைமை கழக நிர்வாகிகள் 65 பேர் கலந்துகொண்டனர்.

4 பேருக்கு  உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்து இருந்தனர் . தாங்கள் அந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில் தற்போதைய உங்களின் இக்கடிதம் ஏற்புடையதாக இல்லை .

அதே போல் நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த கழகத்தின் பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுத்து நிறுத்துவதற்காக தாங்கள் ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்ததும் நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளை தாக்கல் செய்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்துவிட்டு,  தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு எழுதி அனுப்புவது ஏற்புடையதாக இல்லை. என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தில் எடப்பாடிபழனிசாமி ஒ. பன்னீர் செல்வத்தை ஒரு இடத்தில் கூட கழக தலைமை நிலைய செயலாளர் என்றோ அதிமுக பொருளாளர் என்றும் குறிப்பிடவில்லை.

ஆக மொத்தத்தில் அதிகாரம் இல்லாத நீ எனக்கு கடிதம் எழுத தகுதி இல்லாதவர் என்பதை நாசூக்காக சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!