chennireporters.com

இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 65-வது நினைவு தினம் அனுசரிப்பு.

தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர்.இந்து தர்மத்தால் தன்னுடைய சமூகம் பின் தள்ளப்படுகிறது என்று புத்த மதத்துக்கு மாறியவர்.

பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தாலும் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன் என்று உறுதியாக இருந்தவர்.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து நினைவு நாளை கொண்டாடினார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளுக்கு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்து அவர்தம் உரிமைக்காக விடுதலைக்காக பாடுபட்ட அறிவுச்சுடர்.பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு நாளில் அவர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூக நீதியும் மேலோங்கி நிற்கும்.

இந்தியாவை பாதுகாக்க உறுதி ஏற்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க.!