chennireporters.com

பிக் பாஸில் கானா குயில் இசைவாணி சொன்ன பெரிய பொய்..

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் ஐந்தாம் கட்ட நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது .இதில் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் நாட்டுப்புற பாடகியான சின்னப்பொண்ணு சென்னை கானா பாடகி இசைவாணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் சமூகம் சார்ந்த பாடல்களையும் மக்கள் விரும்பும் பாடல்களையும் பாடக்கூடிய பாடகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் கஷ்டங்களையும் அவர்களது துன்பங்களையும் ஒவ்வொருவரும் அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வட சென்னையை பூர்வீகமாக கொண்ட கானா குயில் இசைவாணி தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர்.

அது தவிர தமிழகம் முழுவதும் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இசைவாணி கடந்து வந்த பாதை டாஸ்கில் தன்னுடைய நேரம் வரும்போது.

பிக்பாஸில் தான் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்து வாழ்ந்து வந்தார் என்பதை கண்ணீருடன் பேசினார்.இவருடைய பேச்சை கேட்டு மற்ற போட்டியாளர்களும் கதறி அழுதார்கள்.

பின்னர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக உள்ள பவானி தன்னுடைய கணவரின் இறப்பைப் பற்றி தனியாக இசைவானி இடம் பேசிக்கொண்டிருந்தார்.

இதைக்கேட்ட இசைவாணி அவரை தேற்றும் விதமாக தன்னுடைய திருமண முறிவை பற்றி அவரிடம் மட்டும் ரகசியமாக சொன்னார்.

Thanks zee tamiz

இந்த விஷயத்தை தன்னைப்பற்றி கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசும்போது தனக்கு திருமணமானதை பற்றியோ அல்லது தற்போதைய நிலை என்னது என்பது பற்றியோ இசைவாணி சொல்ல மறுத்துவிட்டார்.

அந்த இடத்தில் இசைவாணி பொய் சொன்னார் என்றே சொல்ல வேண்டும்.தன்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி இந்த நிகழ்ச்சியில் பேசக் கூடாது என்ற எண்ணத்தில் இசைவாணி தெளிவாக இருக்கிறார்.

இந்த நிலையில் இசைவாணி திருமணம் செய்துகொண்ட தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள்.

ஒரு சில பேட்டிகளில் இசைவாணி தனது காதலித்த கணவர் தன்னை முதலில் அக்கா என்று அழைத்ததாக பேட்டிகளில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் தன்னுடைய திருமணத்தை பற்றி பேச வேண்டாம் என்று தவித்திருக்கும்.

இசைவாணி இந்த நிகழ்ச்சியில் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்று விஜய் டிவி பிக் பாஸ் வட்டாரத்தில் பேசிவருகிறார்கள்.

சின்னப்பொண்ணு மற்றும் இசைவாணி யையும் இவர்கள் இருவருக்கும் பாட்டு பாட வைத்து மோதவிட்டு .அவர்களுக்குள்ளேயே ஒரு மோதலை உருவாக்கி ஒருவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற கூடிய சூழ்நிலையை உருவாக்குவார்கள் என்கிற செய்தியும் அடிபடுகிறது.

இதனால் விஜய் டிவியின் ரேட்டிங் பெரிய அளவில் இருக்கும் என்கிறார்கள்.என்னதான் இருந்தாலும் 2020ஆம் ஆண்டு இசைவாணி தன்னுடைய திறமையைவெளிப்படுத்தி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இவரை தேர்வு செய்தது பி.பி.சி. என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!