chennireporters.com

7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஏமாற்றிய பார் கவுன்சில் இணை தலைவர் குடும்பம்.

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் இணை தலைவர் வக்கீல் முருகன்

மனநலம் பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த பார் கவுன்சில் இணைத்தலைவர் வழக்கறிஞர் முருகன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை பற்றிய செய்தி தான் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தக்கோலத்தில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஐந்து வழக்கறிஞர்கள் ஏமாற்றி எழுதி பத்திரம் செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரும் சென்னை புதுச்சேரி பார் கவுன்சில் இணை தலைவர் முருகன் மற்றும் அவரது மனைவி அவரது அண்ணன் அக்கா மாமா ஆகிய ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமரேஷ்.இவரது தந்தை லட்சுமிபதி தாய் செல்வராணி.குமரேஷின் அப்பா லட்சுமிபதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.

தனது மனை செல்வராணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் லட்சுமிபதி வீட்டிலிருந்து வெளியேறி தனியே வசித்து வருகிறார்.இந்நிலையில் அப்பா லட்சுமிபதி காணவில்லை என மகன் குமரேஷ் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் காணாமல்போன லட்சுமிபதி திருவள்ளூரில் வசிக்கும் வழக்கறிஞர் ஜெய்சுந்தர் என்பவரை சந்தித்து தனக்கு குடும்ப விவாகரத்து வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.

முருகனின் அண்ணான் வக்கீல் ஜெய் சுந்தர்.

அப்போது லட்சுமிபதியின் பின்னணியை அறிந்த வழக்கறிஞர் அவருடைய பின்புலங்களை ஆராய்ந்து அவரது சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டார்.

அது தவிர லட்சுமிபதியை தன் வசப்படுத்திக் கொண்ட வழக்கறிஞர் ஜெய் சுந்தர் திருவள்ளூர் அருகே உள்ள மணவாள நகர் காவல் நிலையத்தில் லட்சுமிபதிக்கு சொந்தமான நில பத்திரங்கள் தொலைந்து விட்டதாக

(டாக்குமெண்ட் மிஸ்ஸிங்) போலியாக ஒரு பொய்யான புகாரை கொடுத்து போலியான ஆவணங்களை தயாரித்து லட்சுமிபதி மட்டுமே வாரிசு என ஏமாற்றி லட்சுமிபதியின் சொத்துகளை பொது அதிகாரப் பத்திரத்தில் எழுதி வாங்கியுள்ளார்.

வக்கீல் ஜெய் சுந்தர் 14 ஏக்கர் 50 சென்ட் நிலத்தை தனது தம்பியும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் இணைதலைவர் வழக்கறிஞர் திமுகவை சேர்ந்த முருகன் அவரது மனைவி பானுப்பிரியா அக்கா கோமதி இவரின் கணவர் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோரது பெயர்களில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.

பஞ்சாயத்து தலைவரும் முருகனின் மனைவி வக்கீல் பானுமதி.

இந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த குமரேஷ் தாயார் செல்வராணி யுடன் சென்று கேட்டபோது மேற்படி வழக்கறிஞர்கள் குமரேஷை மிரட்டி அடித்து அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது இதுகுறித்து குமரேஷ் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

அது மட்டுமில்லாமல் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்இதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் வழக்கறிஞர் ஜெயசுந்தர் , முருகனின் மனைவியும் வீராபுரம் பஞ்சாயத்து தலைவருமான வக்கீல் பானுப்பிரியா முருகனின் அக்கா வக்கீல் கோமதி இவரின் கணவர் வக்கீல் செந்தில்குமார் மற்றும் பார்கவுன்சில் இணை தலைவர் முருகன்

ஆகியோர் மீது தக்கோலம் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு, மோசடி செய்தல், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் என 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னை நம்பி வந்த மனநலம் சரியில்லாத நபரை ஏமாற்றி வழக்கறிஞர்கள் குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்டுச்சதி செய்து திட்டமிட்டு ஏமாற்றி போலியான ஆவணங்களை தயாரித்து 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தவிர வக்கீல் முருகன் பேரம்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கி மூலம் வீராபுரம் தண்டலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு கேஸ் வாங்கித்தருவதாக அவர்களுடைய ஆதார் மற்றும் வங்கி தகவல்களை பெற்று பல பேர் பெயரில் மூன்று லட்சம் 5 லட்சம் என பல கோடி ரூபாய்க்கு மேல் லோன் வாங்கியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வங்கி நிர்வாகம் லோன் வாங்கி பணத்தை திருப்பி கட்டவில்லை என் நோட்டீஸை பொதுமக்களுக்கு அனுப்பியுள்ளது.இந்த விஷயம் அந்த கிராம பொது மக்களுக்கு தற்போது தான் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஜெய் சுந்தர் மற்றும் முருகன் குடும்பத்தினரை பொது மக்கள் நேரில் சென்று கேட்டபோது பொதுமக்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வருவதாக வீராபுரம் தண்டலம் கிராம பொதுமக்கள் கூறுகின்றனர்.

பார் கவுன்சில் இணைத்தலைவராக இருக்கும் நபர் திட்டமிட்டு இதுபோன்ற பல செயல்களில் ஈடுபட்டு வருவதாக தமிழக மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பதிவாளருக்கு புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது மேற்படி வழக்கறிஞர்கள் முன் ஜாமீன் பெரும் முயற்சி யில் ஈடுபட்டு வருவதாக திருவள்ளுவர் மாவட்ட வக்கீல்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க.!