chennireporters.com

ஆக்க்ஷனில் இறங்கிய திருப்பத்தூர் எஸ்.பி. அதிரடி வேட்டையில் சிக்கிய பயங்கர ஆயுதங்கள்.

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  ஒரு சில இடங்களில் பயங்கர ஆயுதங்களும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருப்பத்தூர் எஸ்பி சிபி சக்கரவர்த்தி அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து அதிரடி வேட்டையில் இறங்கினார் வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ் இவர் சென்னையில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ஐபிஎஸ் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் 20 பேர் கொண்ட தனிப்படை போலீசார் திடீரென வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் உள்ள இம்தியாஸ் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்த சுமார் 3 லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சா, 10 பட்டாக் கத்திகள் 10 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்யதனர்.

அலுவலகத்தில் இருந்த ரஹீம், பசல், சலாவுதீன் மற்றும் கரண் குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள டீல் இந்தியாஸ் என்பவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

எந்த குற்ற சம்பவங்களும் நடக்காத வகையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அது தவிர சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து பொதுமக்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்று விளக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு எஸ்.பி. சிபிச்சக்கரவர்த்தி பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள்க்குள் கொண்டு வரப்பட்டுள்ளது ரவுடிகளின் செயல்பாடுகள் தனிப்படை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து எந்த நேரத்திலும் காவல் நிலையத்தில் நேரடியாக சென்று புகார் அளிக்கலாம்.

அதுதவிர பொது மக்கள் எந்த நேரத்திலும் தன்னை சந்திக்கலாம் என்று எஸ்பி சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க.!