திருத்தணியில் ஹைவே பெட்ரோல் வாகனத்தில் ஓம்காடு ஊழியர் ஒருவர் லாரி ஓட்டுனர்களை மிரட்டி பணம் பறிக்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருத்தணி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தில் காவல்துறை வாகனத்தில் அதாவது ஹைவே பெட்ரோல் போலீஸ் வாகனத்தில் ஓட்டுனராக வேலை பார்ப்பவர் பாஸ்கர் இவர் ஊர்க்காவல் படை ஊழியர் இவர் வேலைக்கு சேர்ந்து ஆறு வருடங்கள் ஆகிறது. இவர் திருத்தணியில் வசித்து வருகிறார்.
ஆந்திராவில் இருந்து சென்னை செல்லும் காய்கறி வண்டிகள், வாழைப்பழ வண்டிகள், கருவேப்பிலை வண்டிகள், ஆடு ஏற்றி செல்லும் லாரிகள் முட்டை லாரிகள் என ஒவ்வொரு வண்டிகளையும் மிரட்டி வண்டி ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் வசூல் செய்கிறார். இப்படி ஒரு நாள் ஒன்றுக்கு வசூல் செய்யும் தொகை 20 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் வரை வசூலாகிறது.
ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் அரசு வாகனத்தை ஓட்டக்கூடாது என்று திருவள்ளூர் எஸ் பி சீனிவாச பெருமாள் உத்தரவிட்டிருக்கிறார். அதையும் மீறி திருத்தணி எஸ் ஐ ரவி என்பவர் பாஸ்கரையே வண்டி ஓட்ட அழைத்துச் செல்கிறார். பாஸ்கர் கார் ஓட்டினால் தான் நல்ல வருமானம் இருக்கும் என்பாராம்.
தினமும் காலை 9 மணிக்கு வேலைக்கு வந்தால் அடுத்த நாள் காலை 9 மணி வரை வேலை பார்ப்பார்கள். இந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரம் ரூபாய் வரை கல்லா கட்டுகிறார்கள். உதாரணத்திற்கு வாழைப்பழம் ஏற்றிச்செல்லும் வண்டி 500 ரூபாய் கொடுக்கவேண்டும் மறுத்தால் நான்கு வாழைப்பழ தாரை தர வேண்டும் என்று ஓட்டுநரை கீழே இறக்கி கன்னத்தில் அடித்து நான்கு வாழைப்பழத் தாரை வாங்குவாராம் பாஸ்கர். அது முடிந்து ஆடுகளை ஏற்றி செல்லும் வண்டி வந்தால் ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கேட்பார் ஆயிரம் ரூபாய் தரவில்லை என்றால் ஒரு ஆட்டுக்குட்டியை இறக்கி வைத்து விட்டு போ எஸ் ஐ ரவி வீட்டில் விசேஷம் இருக்கிறது அதற்கு பயன்படுத்திக் கொள்ளுகிறோம் என்று ஆட்டுக்குட்டியை கேட்பார் அதற்கு ஓட்டுனர் பாஸ்கரிடம் பேரம் பேசி 400 இல்லை என்றால் 500 ரூபாய் கொடுத்துவிட்டு போவார்.
சம்மதிக்கவில்லை என்றால் 2000 ரூபாய்க்கு கேஸ் போடுவார்கள். முட்டை ஏற்றி செல்லும் வண்டிக்காரரிடம் 500 ரூபாய் கேட்பார். 500 ரூபாய் தரவில்லை என்றால் நாலு பாக்ஸ் முட்டை கேட்டு வாங்குவார்.
காய்கறி ஏற்றி செல்லும் வாகனம் வந்தால் ஹைவே பெட்ரோல் உள்ள அனைத்து காவலர்களுக்கும் காய்கறிகளை அதாவது நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ வீதம் 30 கிலோக்கு மேல் காய்கறி வாங்கிக் கொண்டுதான் வண்டியை அனுப்புவார்கள். இல்லையென்றால் அவர்களுக்கும் அபராதம் 2000 விதிப்பார்கள்.
ஊர்க்காவல் படை காவலர் பாஸ்கர்
இது தவிர ஆந்திராவிலிருந்து வரும் லாரிகளுக்கு லாரி ஒன்றுக்கு முன்னுரிலிருந்து 500 வரை வாங்குவார்கள். அது தவிர இரவு நேரத்தில் குடிபோதையில் வருபவர்களிடம் 2000 ரூபாய் பணம் தர வேண்டும் இல்லையென்றால் பத்தாயிரம் ரூபாய்க்கு வழக்கு போடுவேன் என்று மிரட்டி ஒவ்வொருவரிடமும் ஆயிரம் முதல் 1500 வரை பணத்தை பிடுங்குவார்.
இந்த பாஸ்கர் இவ்வளவு பிராடுத்தனம் செய்தும் கூட ஒரு முறை கூட எஸ்ஐ ரவி கண்டிக்க மாட்டார் அது தவிர ஊர்க்காவல் படை கமாண்டர் நாக பூசனத்திற்கு இந்த பாஸ்கர் மாதம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் தருவதாக கூறப்படுகிறது. அதனால் பாஸ்கருக்கு அதிகமான பணி வழங்கப்படுவதாக தெரிகிறது.
ஒரு ஊர்க்காவல் படை ஊழியருக்கு மாதம் 2800 ரூபாய் தான் சம்பளம் ஆனால் இந்த பாஸ்கர் ஒரு மாதத்திற்கு 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக எடுத்துச் செல்லுகிறார். நாள் ஒன்றுக்கு 4000 ரூபாய் வரை இவர் பங்காக எடுத்துச் செல்லுகிறார். அது தவிர காய்கறி பழங்கள் கருவேப்பிலை கொத்துமல்லி வரை எல்லாம் ஓசிதான்.
திருத்தணியில் உள்ள போலீஸ்காரர்களே கட்டிங் குறைவாக தான் வாங்குகிறார்கள் ஆனால் ஊர்க்காவல் படையை சேர்ந்த பாஸ்கர் வாங்கும் கட்டிங் பார்த்து தலை சுற்றாத குறையாக தலை தெரிக்க ஓடுகிறார்கள் லாரி டிரைவர்கள்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த ஓட்டுநர் சுப்ரமணியன் என்பவர் நேற்று முன்தினம் காய்கறி ஏற்றி செல்லும் பொழுது பணம் கேட்டு பாஸ்கர் தகராறு செய்துள்ளார்.
எஸ்.பி சீனிவாச பெருமாள்.
திருத்தணி பொன் பாடி செக் போஸ்டில் இருந்து திருவள்ளூர் நாராயணபுரம் வரை நாள் ஒன்றுக்கு நான்கு ஐந்து முறை வந்து செல்லும் இந்த வாகனம் இரவு 10 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை வேலை வேலஞ்சேரி ஜங்ஷனில் வாகன தணிக்கையில் ஈடுபடும் அந்த நேரத்தில் தான் இவர்கள் பாக்கெட் நிரம்பும். அந்த இடத்தில் தான் இவர்கள் கல்லா கட்டுவார்கள்.
பணம் தராத லாரி ஓட்டுனர்களை பாஸ்கர் அசிங்கமாக பேசுவது அடிப்பது என எல்லா வரம்பு மீறிய செயல்களையும் செய்து வருகிறார். தனக்கு பணமும் வசூலித்து வீட்டுக்கு காய்கறியும் வாங்கித் தருவதால் சப் இன்ஸ்பெக்டர் ரவி பாஸ்கரை எதுவும் கண்டு கொள்வதில்லை. ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் அரசு வாகனத்தை பயன்படுத்தக் கூடாது அவர்களை காவல்துறை ஊழியர்களாக கணக்கில் வைத்துக் கொள்ளக்கூடாது என்று திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள் போட்ட உத்தரவு காற்றில் பறக்கிறது.
பெருமாளுக்கும் நாமம் திருத்தணி முருகனுக்கும் பட்டை பாஸ்கரின் ஆட்டம் அதிகரித்து வருகிறது. நடவடிக்கை எடுப்பாரா? எஸ்பி சீனிவாச பெருமாள்.