திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் மதிமுக எம்பி துரை வைகோவின் மகள் திருமணம் சென்னை திருவேற்காட்டில் ஜிபிஎன் பேலஸில் இந்து முறைப்படி இன்று பத்து மணியளவில் நடைபெற்றது.
முன்னதாக நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்தினார். அவருடன் அவருடன் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி, சபரீசன் மற்றும் தமிழக அமைச்சர்கள் உயர் போலிஸ் அதிகாரிகள் தமிழக பலர் கலந்து கொண்டனர்.
தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் மணமக்களை நேரில் வந்து வாழ்த்தி சென்றனர். தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிரமுகர்கள், கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், விசிக, எஸ்டிபிஐ, பாஜக பிரமுகர்கள் என பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்கள். திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் எம்.பிக்கள் பலர் மணமக்களை நேரில் வந்து வாழ்த்தினார்கள்.
முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஐஜி செந்தில் வேலன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர், நடிகர்கள் சிவகுமார், சத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மதிமுக தொண்டர்கள் திருமணத்திற்கு திரளாக வந்திருந்தனர். சிறப்பான விருந்தோம்பல் மற்றும் வான வேடிக்கைகள் வரவேற்பில் இடம்பெற்று இருந்தது.
பெரியாரின் கொள்கைகளை தாங்கி தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வை கோபால்சாமி தனது மகன் துரை வைகோவின் மகள் வானதி ரேணுவின் திருமணத்தை இந்து முறைப்படியே நடத்தி இருக்கிறார். இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய பேத்தியின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
வைகோவின் பேத்தி திருமணத்திற்கு கருப்பு உடையில் வந்து மணமக்களை வாழ்த்திய சபரீசன்.
முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வந்து மணமகளை வாழ்த்தியவுடன் மேடையில் வலது பக்கத்தில் அமைதியாக கருப்பு உடையில் அமைதியாக நின்று மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றார் சபரீசன்.
திருமணத்திற்கு யாராவது கருக்கோடையில் வந்து வாழ்த்துவார்களா என்று மண்டபத்தில் இருந்தவர்கள் சிலர் கமெண்ட் அடிக்கத்தான் செய்தார்கள்.