தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று தெரியவரும். முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இதில் முதல் கட்டத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக 15 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 3310 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். தமிழக வெற்றிக்கழகம் ஒன்பது தொகுதிகளிலும், அதிமுக ஏழு தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. பெரம்பூரில் நின்ற தவெக தலைவர் விஜய் 507 தபால் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் குறைந்த வாக்குகள் பற்றி பின்னடைவில் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கிற துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 210 தபால் வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ராமு 328 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல திருச்சியில் நேரு குறைந்த வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் தனது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் முன்னணியில் உள்ளார்.
தமிழகம் முழுவதும் தனித்து நின்ற நாம் தமிழர் கட்சி சீமான் தரப்பினர் ஒரு தொகுதியில் கூட தபால் வாக்கில் முன்னணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
