தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி போன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் கூட்டம் பெருமளவில் காணப்பட்டது.அதில் பல கட்சியை சேர்ந்தவர்கள் பல விதங்களில் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தனர்.
சிலர் மாட்டுவண்டியில் வந்தும், 500 ரூபாய் பண மாலை போட்டுக்கொண்டும், செண்டை மேளம் முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம் என பலர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று வாட்ஸ் அப்பில் ட்ரென்டிங்காக
“உன் ஓட்டு ஒரு யோகியனுக்கு விழுந்தால் உனக்கு எதிர்காலம் “
“ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால் அவனுக்கு எதிர்காலம்”
என்ற இந்த வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே வாக்காளர்கள் தகுதியான நேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். என்பதையே இந்த வரிகள் உணர்த்துகிறது.