ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உலக தாய்ப்பால் தினமாக கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்களையும் அவற்றின் மகத்துவத்தையும் விளக்குகிறது இந்த செய்தி.
தாய்பால் குழந்தைக்கான உணவு மட்டுமல்ல, தாய்க்கும் குழந்தைக்குமான
உறவு சம்மந்தப்பட்டது.
அந்த பாச உறவு பலப்பட உங்கள் குழந்தைகளுக்கு
தவறாது தாய்பால் புகட்டுங்கள்.
தாய்பால் அருந்தும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாகவும்,
நோயெதிர்ப்பு சக்தியோடும் வளரும்.
இறைவன் உங்கள் குருதியை(இரத்தத்தை) பாலாக்கியதன் பொருளே,
உங்கள் குழந்தைக்கு அது உணவாகவேண்டும் என்பதற்காகத்தான்.
தாய்பால் அது குழந்தையின் உரிமை. அதை கொடுக்காமல்
புட்டி பால் புகட்டுவது உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்யும் கொடுமை.
குழந்தைக்கு தாய்பால் கொடுக்கும்போது உங்கள் உணர்வுகளும்
பாலோடு சேர்ந்து குழந்தைக்கு செல்கிறது.
தாய்ப்பால் புகட்டுவதால், அந்த பாச உணர்வு உங்களுக்கும் குழந்தைக்கும் இடையே பலப்படுகிறது.
எல்லாவற்றிலும் கலப்படம் நிறைந்த இவ்வுலகில் என்றும் சுத்தமான
கலப்படமற்ற, சக்திமிகுந்த உணவாக இருப்பது தாய்பால் மட்டுமே.
தயவு செய்து அந்த தாய்பாலை
தவறாமல் உங்கள் குழந்தைக்கு புகட்டுங்கள்.