chennireporters.com

இலங்கையில் நடக்கும் மக்கள் புரட்சி குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் அறிக்கை.

கோத்தபய ராஜபக்சே ஈழத்தமிழர் மீது கொத்துகுண்டு போட்ட பொழுது, வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை படுகொலை செய்தபோது, பெண்களை சீரழித்த பொழுது, நச்சு ஊசிகளை செலுத்தி கொன்ற பொழுது, தமிழர்களை இனப்படுகொலை செய்த போது, முள்வேலி முகாமில் அடைத்து சித்தரவதை செய்தபோது,

தமிழர் நிலத்தில் 2லட்சம் ராணுவத்தினரை நிறுத்திய போது, தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த பொழுது, தமிழ்சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுத்தபொழுது, காணாமல் போனவர் பட்டியலை உதாசினப்படுத்திய போது, அமெரிக்காவுடன் கைகோர்த்த போது, தமிழக மீனவரை கொலை செய்தபோது, இந்தியா கோத்தபயாவிற்கு மரியாதை செய்த போது, இந்தியா ராணுவ ஒப்பந்தம்-பயிற்சி நடத்திய போது, தனது நட்புநாடென இந்தியா கொண்டாடிய போது, ஐநா வாக்குறுதிகளை மீறிய போது, இனப்படுகொலை சாட்சியாளர்களை மிரட்டிய போது என இத்தனை அக்கிரமங்களை

கோத்தபயாவும், இந்திய அரசும் செய்த போது வாய்திறந்து கண்டிக்காதவர்கள், இன்று கோத்தபயாவை கொடுங்கோலன், அதிகாரவெறி பிடித்தவர், பொருளாதார சறுக்கல்களை செய்தவர் என்றுமட்டும் விமரிசித்துவிட்டு கடந்து செல்வதை காண்கிறோம்.

கோத்தபயா நடத்திய கொடூர இனப்படுகொலையை பற்றி இன்றும் கூட தவறியும் வாய்திறக்காமல் இலங்கை மீது விமர்சனம் வைக்கும் சோ-கால்டு முற்போக்காளர்கள் கோத்தபயாவிற்கு நிகரான ஆபத்தானவர்களே.

கோத்தபயா தமிழரை கொடூரமாக இனப்படுகொலை செய்த சர்வதேச குற்றவாளி. இப்பொழுதாவது ‘ஈழம் விடுதலை செய்யபட வேண்டுமென’வும், ‘தமிழர்களுக்கு நேர்ந்தது இனப்படுகொலை’ என சொல்வதற்குரிய துணிச்சலற்றவர்கள், இலங்கை குறித்து விமர்சித்துப் பேசும் அறுகதையற்றவர்கள்.

தோழர் திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்.

இதையும் படிங்க.!